“.............அணிமணித் தண்டையார்க்கும் செழுமல ரடியுங்கண்டான் அவந்தவம் செப்பற்பாற்றோ” சூரபன்மன் காண்கின்ற காட்சி:- “தண்டையுஞ் சிலம்பும் ஆர்க்கும் சரணமும் தெரியக் கண்டான்” முருகப் பெருமானுடைய திருவடியை அகில உலகத்தாரும் புகழ்கின்றார்கள். அதனால் “சகலரு மெச்சும்” என்றார். செகதல மெச்சும் புகழ் வயலிக்கும்:- வயலூர் என்பது அரிய முருக க்ஷேத்திரம். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 5 கல் தொலைவில் நல்ல சூழ்நிலையில் சோலையும் வயலும் சூழ விளங்குகின்றது. அதனால் வயலூரையும் திருச்சிராப்பள்ளியையும் சேர்த்து இத்திருப்புகழில் சுவாமிகள் பாடுகின்றார். வயலிக்கும் சிரகிரியிற்கும்:- இடப் பொருளில் கண்ணுருபு பெற்று வரவேண்டியது நான்காம் வேற்றுமையாக குவ்வுருபு பெற்று வந்தது. உருவு மயக்கம். கருத்துரை சிரகிரிப் பெருமானே! அலைதலை யொழித்து ஆண்டருள்வீர். ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செங்கை யுறவாடி ஒஎஉவரொரு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடி ரண்டு முரையாரை மருவமிக அன்பு பெருகவுள தென்று மனநினையு மிந்த மருள்தீர வனசமென வண்டு தனதனன வென்று மருவுசர ணங்க ளருளாயோ அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க அடலிடுப்ர சண்ட மயில்வீரா அமரர்முத லன்பர் முனிவர்கள்வ ணங்கி அடிதொழுவி ளங்கு வயலூரா |