பக்கம் எண் :


482 திருப்புகழ் விரிவுரை

 

      பவனத் தையொடுக் குமனக் கவலைப்
                ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
                படரிச் சையொழித் ததவச் சரியைக்   க்ரியையோகர்
           பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
                பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற
                பரவப் படுசெய்ப் பதியிற் பரமக்                 குருநாதா
      சிவனுத் தமனித் தவுருத் திரன்முன்
                கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
                த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற்   குணனாதி
           செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
                புதனொப் பிலியுற் பவபத் மதடத்
                த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப்           பெருமாளே.

பதவுரை

பவனத்தை ஒடுக்கும்=மூச்சைப்பிடித்து ஒடுக்கும், மனக் கவலை ப்ரமை அற்று= மனத்துயராகிய மயக்கத்தை விலக்கி, ஐவகை புலனில்=சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐவகைப் புலன்களில், கடிதில் படர் இச்சை ஒழித்த=வேகமாகச் செல்லும் ஆசையை ஒழித்த, தவ=தவநெறியில் நின்ற, சரியை=சரியையாளர்கள், க்ரியை=க்ரியை யாளர்கள், யோகர்=யோகநெறியில் நின்றவர்கள், பரிபக்குவர்=இரு வினை யொப்பு எய்தி மலபரிபாகம் பெற்றவர்கள், நிட்டை நிவர்த்தியினில் பசிசுத்தர்=தியான நிலையில் நின்று துறவு பூண்ட தூயவர்கள், விரத்தர்=உலகப்பற்றை விட்டவர் ஆகிய பெரியோர்களின், கருத்து அதனில் பரவப்படு=தமது கருத்தில் வைத்துப் போற்றப்படும், செய் பதியில்= வயலூரில் வாழும், பரம குருநாதா=பெரிய குருநாதரே! சிவன்=சிவபிரான், உத்தமன்= உத்தமர், நித்த=அழிவில்லாதவர், உருத்திரன்=உருத்திர மூர்த்தி, முக்கணன்=மூன்று கண்களை யுடையவர், நக்கன்=சிரிக்கின்றவர், மழுகரன்=மழுவை யேந்திய கரத்தினர், உக்ர ரண=கொடுமையான போர்க்களத்தில், த்ரிபுரத்தை எரித்து அருள்=முப்புரத்தை எரித்தருளியவர், சிற்குணன்=ஞான குணத்தினர், நிர்க்குணன்=உலக குணம் இல்லாதவர், ஆதி=ஆதிமூர்த்தி, செகவித்தன்=உலகத்துக்கு மூலப் பொருளாயிருப்பவர், நிசப்பொருள்= உண்மைப் பொருளாயிருப்பவர், சிற்பரன்=அறிவுக்கு எட்டாதவர், அற்புதன்= ஆச்சரியமானவர், ஒப்பிலி=ஒப்பு இல்லாதவராகிய சிவபிரானிடத்தே, உற்பவ= தோன்றியவரே! பத்மதட=தாமரைத் தடாகங்கள் நிறைந்த, த்ரிசிரபுர வெற்பு உறை =திருச்சிராப்பள்ளி மலைமீது வீற்றிருக்கின்ற, சற்குமர=உண்மையான குமாரமூர்த்தியே! பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே! புவனத்து=இப்பூமியில், ஒரு பொன் தொடி=ஒரு அழகிய பெண்ணின், சிறு உதர கருவில் பவம் உற்று=சிறிய வயிற்றில் கருவில் தோற்றம் அடைந்து, விதிப்படியில் புணர்=விதியின்படி கூடுகின்ற, துக்க சுகம் பயில்வுற்று=துக்கத்தையும் சுகத்தையும் நுகர்ந்து, மரித்திடில்=இறந்த பின், ஆவிபுரி