நிர்க்குணன்:- குணம்-கட்டுவது. பிராகிருத குணமாகிய சத்துவம் ராஜஸம் தாமசம் என்ற முக்குணங்கள் இல்லாதவர், சிவபெருமான். ஆதி:- அப்பரமனே ஆதிப் பொருள். “அந்தம்ஆதி என்மனார் புலவர்” -சிவஞானபோதம். செகவித்தன்:- வித்து-விதை. இந்த வுலகம் முளைப்பதற்கு விதைப்பொருளாக இருக்கின்றவர் சிவபிரான். நிசப்பொருள்:- அவர் ஒருவரே மெய்ப்பொருள். ஏனைய அனைத்தும் தோன்றி மறையும் பொய்ப் பொருள்களேயாகும். ஒப்பிலி:- “தனக்குவமை யில்லாதான்” -திருக்குறள். “சமானரஹிதம் விபும்” -சுருதி. இறைவன் ஒப்பிலாத ஒருவன். கருத்துரை திரிசிரபுரம் உறையுந் தேவ தேவா! இயம தண்டனையினின்றும் நீக்கி என்னைக் காத்தருள்வீர். பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள் பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள் புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கைமேலே புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடிய ராக்குபொ லாமூ தேவிகள் புலையர் மாட்டும றாதே கூடிகள் நெஞ்சமாயம் |