பக்கம் எண் :


490 திருப்புகழ் விரிவுரை

 

      கருதொ ணாப்பல கோடா கோடிகள்
           விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்
           கலவி சாத்திர நூலே யோதிகள்           தங்களாசைக்
      கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்
           அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்
           கருணை நோக்கிமி லாமா பாவிக            ளின்பமாமோ
      குருக டாக்ஷக லாவே தாகம
           பரம வாக்கிய ஞானா சாரிய
           குறைவு தீர்த்தருள் ஸ்வாமீ கார்முக            வன்பரான
      கொடிய வேட்டவர் கோகோ கோவென
           மடிய நீட்டிய கூர்வே லாயுத
           குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி                அஞ்சுமாறும்
      செருப ராக்ரம கேகே வாகன
           சரவ ணோற்பல மாலா லாளித
           திரள்பு யாத்திரி யீரா றாகிய                      கந்தவேளே
      சிகர தீர்க்கம காசீ கோபுர
           முகச டாக்கர சேணா டாக்ருத
           திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள்          தம்பிரானே.

பதவுரை

குரு கடாக்ஷ=குருமூர்த்தியாய் கடைக்கணிக்க வல்லவரே!  கலா வேத ஆகம=கலை வேதம் ஆகமம் இவைகளின், பரம வாக்கிய=சிறந்த மொழிகளை உபதேசிக்க வல்ல, ஞான ஆசாரிய=ஞான குருவே!  குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி=குறைகள் யாவற்றையும் தீர்த்தருளுகின்ற சுவாமியே, கார்முக வன்பர் ஆன=வில்லையேந்திய வலிமையாளரான, கொடிய வேட்டுவர் கோ கோ கோ என=பொல்லாத வேடர்கள் “கோ கோ கோ” என்று கூக்குரலிட்டு உம்மைச் சுற்றிய போது, மடிய=அவர்கள் இறக்கும்படி, நீட்டிய கூர் வேல் ஆயுத=நீட்டி விடுத்த கூரிய வேலாயுதரே!  குருகு க்ஷேத்ரபுர ஈசா= கோழியூர் என்ற உறையூரில் வாழும் தலைவரே!  வாசுகி அஞ்சுமாறும்=வாசுகி என்ற நாகவேந்தன் அஞ்சும்படி, செரு பராக்ரம=பேர் செய்யும் வீரத்தையுடைய, கே கே வாகன=மயில் வாகனரே!  சரவண உற்பவ=சரவணப் பொய்கையில் தோன்றியவரே! மாலால் லாளித=பெருமையால் அழகு பெற்ற, திரள் புய அத்திரி ஈராறு ஆகிய=திரண்ட புய மலைகள் பன்னிரண்டு கொண்ட, கந்தவேளே=கந்தக் கடவுளே!  சிகர தீர்க்க மகா சீ கோபுர முக=சிகரங்கள் நீண்ட பெருஞ் சிறப்புள்ள கோபுர முகப்பில் வீற்றிருப்பவரே! சடாக்கர=ஆறெழுத்துக்களை யுடையவரே!  சேண் நாடு ஆக்ருத=விண்ணுலகம் போல் உயர்ந்த, திரிசிராப்பள்ளி வாழ்வே=திருச்சிராப்பள்ளியில் வாழ்கின்றவரே!  தேவர்கள் தம்பிரானே=தேவர்கள் போற்றும் தனிப் பெருந்தலைவரே!  பொருளின் மேல் ப்ரிய= பணத்தின் மேல் ஆசை வைத்த, காம