ஆகாரிகள்=காமத்தின் உறைவிடமானவர்கள், பரிவு போல் புணர்=அன்புடையவர்கள் போல் சேரும், க்ரீடா பீடிகள்=காம வீலையின் இருப்பிடமானவர்கள், புருஷர்கள் கோட்டியில்=ஆண்களின் கூட்டத்தில், நாணா மோடிகள்=வெட்கமில்லாத செருக்குடையவர்கள், கொங்கை மேலே புடைவை போட்டிடு=தனங்களின் மீது புடவை போட்டுள்ள, மாய ரூபிகள்=மாய வடிவத்தினர். மிடியர் ஆக்கு=தம்மிடம் வந்தவரைத் தரித்திராகச் செய்யும், பொலா மூதேவிகள்= பொல்லாத மூதேவிகள், புலையர் மாட்டும் மறாதே கூடிகள்=கீழ்மக்களிடத்தும் மறுக்காமல் சேர்பவர்கள், நெஞ்சம் மாயம் கருத ஒணா பல கோடா கோடிகள்= நெஞ்சத்தில் வஞ்சனை நினைவுகள் எண்ண முடியாத பல கோடிக் கணக்காக உடையவர்கள், விரகினால் பலர்மேல் வீழ் வீணிகள்=தந்திரத்தால் பலர்மேல் விழுகின்ற பயனில்லாதவர்கள், கலவி சாத்திர நூலே ஓதிகள்=காம நூல்களையே படிப்பவர்கள், தங்கள் ஆசை கவிகள் கூப்பிடும்=தங்கட்கு விருப்பமான பாடல்களைப் பாடி அழைப்பதில், ஓயாமாரிகள்=ஓயாத மழை போன்றவர்கள், அவசம் ஆக்கிடு=மயக்கத்தைத் தருகின்ற, பேய்நீர் ஊணிகள்=பேய் போல ஆடவைக்கும் கள்ளைக் குடிப்பவர்கள், கருணை நோக்கம் இலா மா பாவிகள்=இரக்குமுள்ள பார்வையே யில்லாத பெரிய பாவிகளாம் பரத்தையருடைய, இன்பம் ஆமோ=இன்பம் ஆகுமோ? (ஆகாது). பொழிப்புரை குருமூர்த்தியாய் கடைக்கண் பார்வையால் அருள்புரிய வல்லவரே! கலை வேதம் ஆகமம் ஆகிய சிறப்பான மொழிகளை உபதேசிக்க வல்ல ஞானாசாரியரே! அடியவர்களின் குறைகளைத் தீர்த்தருளும் சுவாமியே! வில்லையேந்திய வலிய-பொல்லாத வேடர்கள் “கோ கோ” என்று இரைச்சலிட்டு உம்மைச் சூழ்ந்தபோது, அவர்கள் மீது வேலையேவியவரே! கோழியூர் என்ற உறையூரில் வாழும் தலைவரே! வாசுகி என்ற நாகராஜன் அஞ்சுமாறு போர் செய்யும் வீரத்தையுடைய மயில் வாகனரே! சரவணப் பொய்கையில் தோன்றியவரே! பெருமையும அழகும் திரட்சியும் படைத்த மலைபோன்ற பன்னிரு தோள்கைளையுடையவரே! கந்தக் கடவுளே! சிகரங்கள் நீண்ட பெருஞ் சிறப்புள்ள கோபுர முகப்பில் வீற்றிருப்பவரே! ஆறு அட்சரங்கட்கு உரியவரே விண்ணுலகம்போல் உயர்ந்த திரிசிராப்பள்ளியில் வாழ்பவரே! தேவர்கள் போற்றும் தனிப் பெருந் தலைவரே! பணத்தாசை கொண்ட காமத்தின் உறைவிடமானவர்கள், அன்புடையவர்போல் நடித்துச் சேரும் காமலீலைக்கு இருப்பிடமானவர்கள், ஆண்களில் கூட்டத்தில் நாணமில்லாத செருக்குடையவர்கள், தனத்தின் மீது ஆடையிட்டுள்ள மாயா வடிவத்தினர்கள், தம்மிடம் வந்தவரைத் தரித்திரராகச் செய்யும் பொல்லாத மூதேவிகள், கீழ்மக்களையும் மறுக்காமல் சேர்பவர்கள், நெஞ்சத்துள்ள மாய நினைவுகள் |