பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 493

 

வேட்டுவர் கோகோ கோவென மடிய நீட்டிய கூர்வேலாயுத:-

கந்தவேள் வள்ளி நாயகியை களவாடிக் கொண்டு போன போது, வேடர்கள் வில்லம்புடன் தொடர்ந்து சென்று, கோ கோ என்று கதறச் சூழ்ந்து வளைந்தார்கள்.

வள்ளிபிராட்டியார் “ஐயனே!  நும்மீது அம்புகளை ஏவும் இவர்கள்மீது வேல் ஏவும்” என வேண்டினார். அப்போது கொடியில் இருந்தசேவல் கொக்கரித்தது. வேடர்கள் வீழ்ந்து மாய்ந்தனர். பின்னர் நாரதரின் வேண்டுகோளின்படி, முருகவேள் அனுமதி செய்ய, வள்ளிநாயகி, “யாவரும் எழுக” என்னலும் வேடர்கள் உயிர்பெற்றெழுந்தார்கள். கந்தபுராணம் சேவலின் ஒலியால் வேடர்கள் மாய்ந்தார்கள் என்று கூறுகின்றது. அருணகிரியார், வேலை விட்டு மாய்த்தார் என்று கூறுகின்றார். இவ்வாறே பிறிதொரு பாடலிலும் கூறுகின்றார்.

“வேற்கொடு கடுகிய முடுகிய
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட     மயிலேறும்”
                                                -(வெருட்டி) திருப்புகழ்.

குருகுக்ஷேத்ர புரீசா:-

குருகு-பறவை. கோழியூர்-என்பது உறையூர்.

திருமுக்கீச்சுரம், யானையைக் கோழி வென்றதால் கோழியூர் எனப் பேர் பெற்றது.

இத்தி ருத்தலம் திரிசிராமலைக்கு மேற்கே 1 கல் தொலைவில் உள்ளது.

வாசுகி அஞ்சமாறு செரு பராக்ரம கேகேவாகன:-

கேகயம்-மயில்.

வாசகியென்ற அரசனை மயில் வென்றது.

“வாளெயிற துற்றபகு வாய்தொறு நெருப்புமிழும்
வாசுகி எடுத்துதறும் வாசிக்காரனும்”              - திருவகுப்பு.

திரள்       புயாத்திரி:-

புய அத்திரி, அத்திரி-வலை, புயமாகிய மலை.

கருத்துரை

திரிசிராமலை வேவு முருகா! மகளிர் இன்பம் ஆகாது.