“பெரியவன் சிராப்பள்ளிப் பேணுவார் அரியயன் தொழ அங்கிருப் பார்களே” -அப்பர். சிறியவர்:- சிவகுமாரர் நால்வர், விநாயகர், வீரபத்திரர், வைரவர், வேலவர் இந்த நால்வரில் சிறியவர் முருகர். கருத்துரை சிராமலை நாதா! உமது பாதத்தைப் புகழ்ந்து பாட அருள் செய்வீர். வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொ ணாதது நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது மாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது லோகத்துக் காதி யானது கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி யூனத்தைப் போடிடாதும யங்கலாமோ ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய லாகிப்பொற் பாத மேபணி கந்தவேளே ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காளமோடட ராரத்தைப் பூண்ம யூரது ரங்கவீரா நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள் நாடிற்றுக் காணொ ணாதென நின்றநாதா நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர் சிராமலை நாதர்க்குச் சாமி யேசுரர் தம்பிரானே. |