பக்கம் எண் :


498 திருப்புகழ் விரிவுரை

 

ஆரவாரத்துடன் சேல்மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயலூர் என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளி, நஞ்சினையுடைய பாம்பை மாலையாகத் தரித்துக் கொள்ளும் மயிற்பரியின் மீது பவனிவரும் வீரமூர்த்தியே! நாசியில் பிராணவாயுவை ரேசகபூரக கும்பகமென்னும் சாதனங்களால் செலுத்தி மேலைப் பெருவெளிவரை எட்டாத யோகிகளால் நாடிக் காணமாட்டாதவரென அப்பாலைக்கப்பாலாய் நின்ற வான்பொருளே! மலையின் கிளைச் சிகரமானது உயர்ந்து மேக மண்டலம்வரை நீண்டு உயர்ந்துள்ள திரிசிராமலை என்னுந் திருமலையின் மீது கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு உரிய பொருளாக விளங்குபவரே! தேவர்கட்கெல்லாந் தலைவரே! கல்வியறிவினால் காணப்படாததும், கிரியா மார்க்கத்தால் கிட்டுதற்கரியதும், வாய்விட்டு வசனிப்பதற்கு இயலாததும், குற்றமுள்ளவர் மனதில் தோன்றாமல் ஒளிந்திருப்பதும், அன்பர்கள் உள்ளத்தில் நீங்காது நிலை பேறாக இருப்பதும், மாயையினால் சூழ முடியாததும், விந்து நாத ஓசைக்கு அதி தூரத்தில் இருப்பதும், பூத வெளி கடந்து பரவெளியின் முடிவில் இலகுவதும், உலகத்திற்குத் தலைமையானதும் ஆகிய மெய்ப் பொருளை நாயேன் கண்டு, சிவயோகத்தைச் சேர்ந்து உய்யுமாறு உண்மை உபதேசித்தருள்வீர். இனி அடியேன் இவ்வூன உடம்பை வெறுக்காது வறிதே வாணாளைக் கழித்து மயங்குவது முறைமையோ?

விரிவுரை

வாசித்துக் காணொணாதது:-

கல்வியறிவினால் இறைவனைக் காண முடியாது. அநுபவ அறிவினாலேயே காண முடியும். அவ்வநுபவ அறிவு கலையறிவால் வரும் அநுபவ அறிவை வேண்டாது வெறுங் கலையறிவே அமையும் என்பார்க்கு அறிவுறுத்துவாராகி “வாசித்துக் காணொணாதது” என்றனர்.

“கற்றிட்டுத் தேடொணாதது” என்றார் பிறிதோரிடத்திலும்.

       மணக்கு மலர்த் தேனுண்ட வண்டே போல
                வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோ ரெல்லாம்
       இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்
                கியற்கை நிலை யாததுதான் எம்மாற்கூறும்
       கணக்குவழக் கனைத்தையுங் கடந்த தந்தோ
                காண்பரிதிங் கெவர்க்கு மெனக் கலைகளெல்லாம்
       பிணக்கறிநின் றோலமிடத்து தனித்து நின்ற