பெரும்பதமே மதாதீதப் பெரியதேவே -இராமலிங்க அடிகள். பூசித்துக் கூடொணாதது:- பூஜை செய்வதாகிய வெறுங் கிரியை நெறியால் மட்டும் இறைவனோடு கூட முடியாது. ஞானநெறி ஒன்றாலேயே இறைவனைக் கூடமுடியும். அந்த ஞானத்திற்குக் கிரியாநெறி சாதனமாகும். சரியையாற் கிரியையும், கிரியையால் யோகமும், யோகத்தால் ஞானமும், ஞானத்தால் இறைவனையும் அடையலாம். “ஓது சரியைக் ரியையும் புணர்ந்தவர் எவராலும் ஓத அரிய துரியங் கடந்தது” -(ஓலமறைக) திருப்புகழ். “கிரியை யாளர்க்கும்................................எட்டரிதாய” -(சரியையாளர்) திருப்புகழ். வாய்விட்டுப் பேசொணாதது:- இறைவனது தன்மை வாக்கினால் இத்தன்மைத்தென்று அறுதியிட்டுப் பேசுந் தரமுடையதன்று. உணர்ச்சியால் உணர்வினோர் உணர்தற்பாலதாம். “உலகெலா முணர்ந்தோதற் கரியவன்” -சேக்கிழார். “மக்கட்குக் கூறரிதானது” -திருப்புகழ். “மாற்றம் மனங் கழிய நின்ற மறையோனே” -மணிவாசகம். “இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க” -மணிவாசகம். மாசர்க்குத் தோணொணாதது:- இறைவன் மாசுடையார் மனதில் தோன்றாமல் பாலிற்படு நெய்போல மறைந்திருப்பான். நேசர்க்குப் பேரொணாதது:- அன்பர்கள் உள்ளத்தைவிட்டு நீங்காது இறைவன் நிலை பேறாக வீற்றிருப்பான். “இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க” -மணிவாசகம். கற்பகோடிக்காலம் கனலுக்கு நடுவே சியின் மீது நின்று ஊணுறக்கந் தவிர்த்து, பொறி புலன்களை யொடுக்கி, எலும்பு |