மிகவும் அடைய, திருட்டு ராட்சதர் பொடிபட=திருட்டுத்தனமுள்ள இராட்சதர்கள் பொடியாகுமாறும், வெடிபட=பூமிவெடிக்குமாறும், எடுத்த வேல் கொடு=திருக்கரத்தில் எடுத்த வேலாயுதத்தைக் கொண்டு, கடுகிய முடுகிய, கடுமையுடன் துரத்திக்கொண்டு வந்த, செருக்கு வேட்டுவர்=அகங்கரித்த வேடர்கள், திறைஇட=திறை தந்து வணங்கும்படியும், முறை இட=முறையிட்டு வேண்டும்படியும் செய்த, மயில் ஏறும் செரு பராக்ரம=மயிலின்மீது ஏறுகின்ற போர் வீரரே! நிதி=செல்வமே! சரவணபவ=சரவணபவ! சிவந்த பாற்கரன்=சிவந்த ஒளியையுடைய சூரியனும், இமகரன் வலம் வரும்=சந்திரனும் வலம் வருகின்ற, திரிச்சிராப்பள்ளி மலைமிசை நிலைபெறு=திரிச்சிராப்பள்ளி என்ற மலையின்மீது நிலைத்து வாழுகின்ற, பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே! வெருட்டி ஆட்கொள்ளும்=தம்பால் வந்தவர்களை வெருட்டி அடிமைப்படுத்தவல்ல, விடமிகள்= நஞ்சை யொத்தவர்கள், புடைவையை நெகிழ்ந்து=ஆடையைத் தளர்த்தி, அணாப்பிகள்= ஏமாற்றுபவர்கள், படிறிகள்=பொய் சொல்லுபவர்கள், சடுதியில் விருப்பம் ஆக்கிகள்= வெகுவேகத்தில் தம்மிடம் விருப்பம் வரும்படிச் செய்பவர்கள், விரவிய திரவியம் இலர் ஆனால்=நிறைந்த செல்வம் இல்லாதவராயின், வெறுத்து நோக்கிகள்=வெறுப்புடன் பார்ப்பவர்கள், கபடிகள்=வஞ்சனை நினைவு உடையவர்கள், நடம் இடுபத்தர்=நடனஞ் செய்யுங் காலையுடையவர்கள், தூர்த்திகள்=காமமுடையவர்கள் ஆகிய பொது மாதரின், ம்ருகமத பரிமள=கஸ்தூரி முதலிய நறுமணம் வீசும், விசித்ரம் மேல்படு முலையிலும்= அழகு மேம்பட்டு விளங்கும் தனத்திலும், நிலையிலும்=நிற்கின்ற வகையிலும், எவரோடும்=யாரையும், மருட்டி வேட்கை சொல் மொழியினும்=மயக்குவித்து ஆசை வார்த்தைகளைச் சொல்லும் சொற்களினாலும், விழியினும்=கண்களிலும், அவிழ்த்து பூகமழ் குழலினும்=மலர்ந்த பூக்கள் மணக்கும் கூந்தலிலும், நிழலினும்=ஒளியிலும், மதிக்க ஒணா=மதிக்க முடியாத, தளர் இடையினும்=தளர்ந்த இடையினும், நடையினும்= நடையினாலும், அவமே யான் மயக்கம் ஆய்=அடியேன் வீணாக மயக்கமடைந்து, பொருள் வரும் வகை க்ரிஷிபணும் தடத்து=பொருளைச் சேகரிக்க வேண்டிய முயசிகளைச் செய்து கொண்டிருந்த வேலையில், மோட்சம் அது அருளிய= அடியேனுக்கு வீடு பேற்றை அருள் புரிந்த, பல மலர் மணத்த=அநேக மலர்கள் நறுமணம் வீசும், வார்கழல்=நீண்ட திருவடிகளை, கனவிலும் நனவிலும் மறவேனே= அடியேன் கனவிலும் நனவிலும் மறக்கமாட்டேன். பொழிப்புரை இருளேயில்லாத தேவவுலகில் விளங்கும் ஆயிரங் கண்களுடைய இந்திரனுடைய வறுமை நீங்குமாறு பாதுகாவல் செய்தருளிய முருகக் கடவுளே! பன்னிரு கரங்களை யுடையவரே! குகப் பெருமாளே! வீர மூர்த்தியே! இலட்சுமிகரம் விளங்கும் தலைவரே! பசுபதியாம் சிவபெருமானுடைய குருநாதரே! எல்லா ராஜ்யங்கட்கும் அரசரே! புகழும் வெற்றியும் |