பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 507

 

அதனால் மலைகளும் தனத்துக்கு நிகராக முடியாமல் போய் விட்டன.

ககசாலக் குலத்தைக் குமைத்து:-

ககம்-பட்சி. சாலம்-கூட்டம்.

பறவைகளின் கூட்டத்தின் தலைமையானது சக்கரவாகப்புள். அது தனத்துக்கு உவமை கூறப் பெறுவது. அது பறக்கும் இயல்புடையது. தனம் பறவாது நிலைபெற்றிருப்பதனால், அந்த சக்கரவாகப் பட்சியையும் வருந்த வைத்தது.

      “வல்லுச் சக்கரம் மதன்குடம்”            -உசிதசூடாமணி.

      “சக்கிரம் வைத்தப்பொற்குட மொத்திட்டுத்திகழ் முலைமேவும்”
                                                          -திருப்புகழ்.

பகட்டி:-

பகட்டுதல்-ஆடம்பரம் செய்தல்; நன்றாக அலங்கரிக்கப் பட்டு விளங்குவது தனம்.

குருத்தத்துவத்துத் தவர் சோரா:-

குருவாகவும், மடாதிபதிகளாகவும், துறவிகளாகவும் உள்ள முனிவர்களும் சோர்ந்து பதைபதைக்கச் செய்யவல்லது தனம்.

      “துரவினர் சோரச்சோர நகைத்து”           -திருப்புகழ்.

புடைத்துப்பணைத்துப் பெருக்கக் கதித்து புறப்பட்ட கச்சுத் தனமானார்:-

பருத்தும் செழித்தும் மிகவும் உயர்ந்தும் தோன்றுகின்ற தனத்தையுடைய பொதுமாதர்கள்.

தடத்துற்பவித்து:-

தடம்-குளம்.

சரவணப் பொய்கையில் செந்தாமரைக் கமலத்தில் முருகவேள் மூவருந் தேவரும் போற்ற அவதரித்தருளினார்.

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல்
நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடு நிமல மூர்த்தி
அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்
வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந் தருளினானே. -கந்தபுராணம்.