தமிழ்க்குக் கவிக்குப் புகச் செய்ப்பதிக்குத் தருக்கற் குடிக்குப் பெருமாளே:- தமிழ்க்குப் பெருமாளே! கவிக்குப் பெருமாளே! செய்ப்பதிக்குப் பெருமாளே! கற்குடிக்குப் பெருமாளே! என்று விரித்துக் கொள்க. அருணகிரியாருக்கு இரண்டாவது முறையாக வயலூரில் முருகன் அருள் புரிந்து வயலூரையும் வைத்துத் திருப்புகழ் பாடுமாறு பணித்தருளினார். அதனால் எந்தத் தலத்தில் சென்று தரிசித்தாலும் “வயலூரா! வயலூரா” என்று மறவாமல் வயலூரைப் பாடுவாராயினார். திருச்சிராப்பள்ளிக்கு இப்போது கிடைத்துள்ள பாடல்கள் பதினைந்து. அவற்றுள் ஒன்பது திருப்புகழில் வயலூரைப் பற்றிக் கூறியிருக்கின்றார். இதுபோல் வயலூருக்கு அடுத்துள்ள இந்த திருக்கற்குடி என்ற தலத்துத் திருப்புகழிலும் “வயலூருக்குத் தலைவரே” என்று சிறப்பித்துக் கூறுகின்றார். தமிழுக்குத் தலைவன், தமிழ்க் கவிக்குத் தலைவன், வயலூருக்குத் தலைவன், கற்குடிக்குத் தலைவன் முருகன். கருத்துரை திருக்கற்குடி மேவுந் திருமுருகா! உனது பாதமலரைத் தந்தருள்வாய். நெறித்துப் பொருப்புக் கொத்த முலைக்குத் தனத்தைக் கொட்டி நிறைத்துச் சுகித்துச் சிக்கி வெகுநாளாய் நினைத்துக் கொடத்துக் கத்தை யவத்தைக் கடுக்கைப் பெற்று நிசத்திற் சுழுத்திப் பட்ட அடியேனை |