இறுக்கிப் பிடித்துக் கட்டி யுதைத்துத் துடிக்கப் பற்றி யிழுத்துத் துவைத்துச் சுற்றி யமதூதர் எனக்குக் கணக்குக் கட்டு விரித்துத் தொகைக்குட் பட்ட இலக்கப் படிக்குத் தக்க படியேதான் முறுக்கித் திருப்பிச் சுட்டு மலத்திற் புகட்டித் திட்டி முழுக்கக் கலக்கப்பட்டு அலையாமல் மொழிக்குத் தரத்துக் குற்ற தமிழ்க்குச் சரித்துச் சித்தி முகத்திற் களிப்புப் பெற்று மயிலேறி உறுக்கிச் சினத்துச் சத்தி யயிற்குத் தரத்தைக் கைக்கு ளுதிக்கப் பணித்துப் பக்கல் வருவாயே உனைச்சொற் றுதிக்கத் தக்க கருத்தைக் கொடுப்பைச் சித்தி யுடைக்கற் குடிக்குட் பத்தர் பெருமாளே. பதவுரை சித்தி உடை கற்குடிக்குள்=சித்திகளையுடைய திருக்கற்குடி என்ற தலத்தில் வாழும், பத்தர்=அன்பர்கள் போற்றும், பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! நெறித்து= மோகத்தால் மனம் வளைந்து, பொருப்புக்கு ஒத்த=மலைக்கு நிகரான, முலைக்கு தனத்தை கொட்டி=தனத்துக்காக தனத்தை நிரம்பக் கொட்டிக் கொடுத்து, நிறைத்து சுகித்து=நிரம்பவும் இன்பத்தை அநுபவித்து, சிக்கி=ஆசை வலையில் அகப்பட்டு, வெகு நாளாய்=பல நாள்களாக, நினைத்துக்கொடு=அந்த இன்பத்தையே நினைத்துக் கொண்டு, அத்துக்கத்தை=அந்த துன்பங்களுக்கும், அவத்தைக்கு=வேதனைக்கும், அடுக்கை பெற்று =ஆளாகி, நிசத்தில் சுழுத்திபட்ட=உண்மையான மரணத் தூக்கத்தையடைந்த, அடியேனை=அடியேனை, யமதூதர்கள்=இயமனுடைய தூதர்கள், இறுக்கி பிடித்துக் கட்டி= அழுத்தமாகப் பிடித்துக் கட்டியும், உதைத்தும்=காலால் உதைத்தும், துடிக்க பற்றி= துடி துடிக்கப் பற்றியும், இழுத்து சுற்றி வைத்து=சுற்றிநின்று இழுத்தும் மிதித்தும், எனக்குக் கணக்கு கட்டு விரித்து=என்னுடைய கணக்குக் கட்டை விரித்துக் காட்டியும், தொகைக்கு உட்பட்ட இலக்கப்படிக்குத் தக்கபடியே=எனது பாவங்களைக் குறித்துள்ள ஏட்டில் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்றபடியே, முறுக்கி=என்னை முறுக்கியும், திருப்பு சுட்டு=திருப்பித் திருப்பி நெருப்பில் சுட்டும், மலத்தில் புகட்டி=மலக் குழியில் அழுத்தியும், திட்டி=வைதும், முழுக்க கலக்கப்பட்டு அலையாமல்=முழுதும் என்னை கலக்கமுறச் செய்ய, அக்கலக்கத்தில் |