கருத்துரை திருக்கற்குடி இறைவா! யமவாதனையகற்றி யாண்டருள்வீர். இரத்தினகிரி (வாட்போக்கி) இத்தலம் திரிசிராப்பள்ளி மாவட்டத்தில் குளித்தலைக்குத் தெற்கே 61/2 கல் தொலைவில் இருக்கின்றது. அப்பர் தேவாரம் பெற்றது. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் ஒரு கலம்பகம் பாடியுள்ளார்கள். ஐயர்மலை, சிவாயமலை என்ற பேர்களும் உண்டு. கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற் கமலத் தியல்மைக் கணினாலே கடிமெய்ப் புயலைக் கருதிக் கறுவிக் கதிர்விட் டெழுமைக் குழலாலே நயபொற் கலசத் தினைவெற் பினைமிக் குளநற் பெருசெப் பிணையாலே நலமற் றறிவற் றுணர்வற் றனனற் கதியெப் படிபெற் றிடுவேனோ புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக் கறமுற் சரமுய்த் தமிழ்வோடும் பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட் டொழியப் புகழ்பெற் றிடுவேனோ செயசித் திரமுத் தமிழுற் பவநற் செபமுற் பொருளுற் றருளவாழ்வே சிவதைப் பதிரத் தினவெற் பதனிற் றிகழ்மெய்க் குமரப் பெருமாளே. பதவுரை புயல் உற்று இயல்=மேகங்கள் படியுந் தன்மையுடைய, மை கடலில்=கரிய சமுத்திரத்தில், புகு கொக்கு அற=புகுந்து நின்ற மாமரம் அறும்படி, முன் சரம் உய்த்து= முன்னாளில் வேலை விடுத்து, அமிழ்வோடும்=அடக்கி ஆழ்த்தும் ஆற்றலுடன், பொருதிட்டு=போர் செய்து, அமரர்க்கு உறு துக்கமும் விட்டு ஒழிய=தேவர்கட்கு இருந்த துன்பம் அவர்களைவிட்டு அகலுமாறு செய்த, புகழ்பெற்றிடுவோனே=புகழைப் பெற்றவரே! செய சித்திர=வெற்றியைத் தரும் அழகிய, முத்தமிழ் |