உற்பவ=முத்தமிழ்ப் பாடல்களின் மூலம் வெளிப்படும், நல் செபம்=சிறந்த மந்திரங்களையும், முன் பொருளும் உற்று=மேலான பொருளையும் அடைந்து, அருள் வாழ்வே=அவற்றை உலகுக்கு வழங்கிய வாழ்வே! சிவதைபதி=சிவாயம் என்று கூறப்படும், ரத்தின வெற்பு அதனில்=இரத்தினகிரியில், திகழ் மெய் குமர=விளங்கும் உண்மை வடிவாம் குமாரக் கடவுளே! பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! கயலை சருவி=கயல் மீனோடு போர்செய்து, பிணைஒத்து=பெண்மானை நிகர்த்து, அலர் பொன் கமலத்து இயல்=அழகிய தாமரை மலரின் தன்மையைக் கொண்ட, மைகணினாலே=மை பூசிய கண்ணினாலும், கடி மொய் புயலை கருதி கறுவி=விளக்கமுற்று நெருங்கிய மேகத்தை நோக்கிக் கோபித்து, கதிர் விட்டு எழும்=ஒளி வீசி எழுந்து திகழ்கின்ற, மை குழலாலே=கரிய கூந்தலாலும், நய பொன் கலசத்தினை=இனிமையும் அழகுங்கொண்ட குடத்தையும், வெற்பினை=மலையையும், மிக்கு உள=மேம்பாடுள்ள, நல்பெரு செப்பு= நல்ல பெரிய கரகத்தையும் ஒத்த, இணையாலே=இரு தனங்களாலும், நலம் அற்று=அடியேன் நலன்களை இழந்து, அறிவு அற்று=நல்லறிவையும் இழந்து, உணர்வு அற்றனன்=மெய் யுணர்வையும் இழந்துவிட்டேன், நல் கதி எப்படி பெற்றிடுவேனோ=நல்லமுத்தியை எப்படிப் பெறுவேனோ? பொழிப்புரை மேகங்கள் படியுந் தன்மையுடைய கரிய கடலில் புகுந்து மாமரமாய் நின்ற சூரபன்மன் மாயும்படி முன்னாள் வேலாயுதத்தை விடுத்து போர் புரிந்து, தேவர்கட்கு இருந்த துயரத்தைக் களைந்து புகழ் பெற்றவரே! வெற்றியைத் தரும் முத்தமிழ்ப் பாடல்களின் மூலம் வெளிப்படும் சிறந்த மந்திரங்களையும், மேன்மையான பொருளையும் உலகுக்கு அருளிய செல்வமே! சிவாயம் என்ற இரத்தினகிரியில் விளங்குகின்ற, உண்மைப் பொருளாகிய குமாரக் கடவுளே! பெருமிதமுடையவரே! கயல் மீனோடு போர்புரிந்து, பெண்மானை நிகர்த்து, அழகிய தாமரை மலரின் தன்மையுடைய மை பூசிய கண்ணினாலும், விளக்கமுற்று நெருங்கிய மேகத்தை நோக்கிக் கோபித்துஒளி வீசி எழுந்து திகழும் கரிய கூந்தலினாலும், இனிமையும் அழகும் படைத்த குடத்தையும், மலையையும், மேம்பாடு உள்ள நல்ல கரகத்தையும் ஒத்த இரு தனங்களாலும், நலமும் மெய்யறிவும் மெய்யுணர்வும் அடியேன் இழந்தேன்; இனி நான் நற்கதியை எப்படிப் பெறுவேனோ? விரிவுரை கயலைச் சருவி:- பெண்களின் கண்கள் மீனைக் காட்டிலும், புரட்சியும், பொலிவும் மிகுந்திருப்பதனால் கயல் மீனுடன் போர் புரிந்து வென்றது என்றார். |