ரத்னகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் பெருமாளே. பதவுரை தித்தமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு திக்குடுடு டூடமட, டாடமட டூடுடுடு என=தித்தி மித.....டூடுடுடு என்ற ஒலியுடன், தாளம் திக்கு முகில் ஆட=திசைகளில் திரண்டு தாளம் ஒலிக்கவும், அரி ஆட=திருமால் ஆடவும், அயன் ஆட=பிரமதேவர் ஆடவும், சிவன் ஒத்து விளையாட=சிவபெருமானும் அதற்கு இசைந்து களிநடம் புரியவும், பரை ஆட=அம்பிகை ஆடவும், வரர் ஆட= சிறந்த முனிவர்கள் ஆடவும், பல திக்கு அசுரர் வாட=பல திசைகளிலும் இருந்த அசுரர்கள் மனம் வாடவும், சுரர் பாட=தேவர்கள் கீதங்கல் பாடவும், மறை பாட= வேதங்கள் துதி செய்யவும், எதிர் களமீதே=எதிர்த்து வந்த போர்க் களத்திலே, எத்திசையும் நாடி=எல்லாத் திசைகளையுந் தேடிச் சென்று, யமனார்=கூற்றுவனார், நிணமொடு ஆட=சதைக் கொழுப்பில் ஆடவும், பெலம்மிக்க நரி ஆட=வலிமை மிகுந்த நரிகள் ஆடவும், கழுது ஆட=பேய்கள் ஆடவும், கொடி ஆட=காக்கைகள் ஆடவும், சமர் எற்றி வரு பூதகணம் ஆட=போரில் மோதி வருகின்ற பூதகணங்கள் ஆடவும், ஒளி ஆட=ஒளி வீசவும், விடு வடிவேலா=விடுத்தருளிய கூரிய வேலாயுதரே! எத்தி ஒரு மானை=ஏமாற்றி ஒப்பற்ற மான் போன்ற வள்ளியின், தினை காவல் வல பூவைதனை= தினை காவலில் வல்ல நாகண வாய்ப்பறவை போன்ற வள்ளி பிராட்டியாரை, சித்தம் அலை காமுக=உள்ளத்தைக் கலக்குவித்த, ஆசையுடையவரே! குக=குகப் பெருமாளே! நமசிவாயனொடு=சிவபெருமானுடன், ரத்னகிரி வாழ் முருகனே=இரத்னகிரியில் வாழ்கின்ற முருகக் கடவுளே! இளையவா=இளம்பூரணரே! அமரர்=தேவர்கள் போற்றுகின்ற, பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! சுற்ற கபடொடு பல=சூழ்ந்துள்ள வஞ்சனைகள் பலவும், சூது வினை ஆன பல=சூது நிறைந்த தொழில்கள் பலவும், கற்ற களவோடு பழிகாரர்=கற்றுக்கொண்ட கள்ளச் செயலுடன் பழியையுடையவர்கள், கொலைகாரர்= கொலைகாரர்களாகிய இவர்களுடன் கூடி, சலி சுற்ற விழல் ஆன பவிஷோடு=சலிப்புற்று அலைந்து வீணான பெருமையுடன், கடல் மூழ்கி=துன்பக் கடலில் முழுகி, வருதுயர் மேவி=அதனால் வரும் துன்பத்தை அடைந்து, துக்க சமுசார=துக்கத்துடன் கூடிய குடும்ப வாழ்க்கையான, அலை மீனது என=கடலில் மீன்போல் அலைந்தும், கூழில் விழுசெத்தைஎன=கூழில் உடல் குப்பை போலக் கிடந்தும், மூளும் ஒரு தீயில் மெழுகு ஆன உடல்=மூண்டு எரியும் பெரிய நெருப்பில்பட்ட மெழுகு போல் உருகும் உடல், சுத்தம் அறியாத பறி காயம்=தூய்மையே அறியாத பாரம் உடைய உடல், அதில் மேவி வரு பொறியாலே=இத்தகைய உடம்பில் பொருந்தியுள்ள மெய் வாய் கண் நாசி செவி என்னும் இந்திரியங்களால், சற்றும் மதியாத=சிறிதும் மதிக்காத, கலி காலன் வரும் நேரம் அதில்=வலிய காலன் வருகின்ற நேரத்தில், தத்து அறியாமல்=இந்த ஆபத்து வருவதை அறியாமல், ஓடி ஆடி வரு=ஓடியாடி வருகின்ற, சூதர் ஐவர்= |