சூதாடிகளான ஐம்புலன்கள் ஐவர்கள், சத்தபரிச ஆனமணம் ரூபம் ரசம் ஆன பொய்மை=சப்தம் ஸ்பரிசம் மணம் ரூபம் ரசம் என்ற இன்பங்களில், விளையாடி= விளையாடி (அதன் காரணமாக), தக்க மடவார் மனையை நாடி=தகுந்த மாதர்களையும் அவர்களின் வீடுகளையும் தேடிச் சென்று, பல சித்து விளையாடு வினை=பல மாய வித்தைகளை அம்மாதருடன் ஆடுகின்ற தொழில், சீசி இது நாற=சீசி என்று பலருக்கும் வெறுப்புண்டாக, உடல் தத்தி=என் உடல் வருத்தமடைந்து, முடிவு ஆகி விடுவேனோ= அடியேன் இறந்து படுவேனோ? முடியாத பதம் அருள்வாயே= அழிவில்லாத உமது திருவடியைத் தந்தருளுவீர். பொழிப்புரை தித்தமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு திக்குடுடு டூடமட, டாடமட டூடுடுடு என்ற தாளங்கள் திசைகளில் திரண்டு ஒலிக்கவும், திருமால் ஆடவும், பிரமன் ஆடவும், சிவபிரான் இசைந்து விளையாடவும், பராசக்தி ஆடவும், முனிவர்கள் ஆடவும், பல திசைகளில் உள்ள அசுரர்கள் வாடவும், தேவர்கள் துதி செய்து பாடவும், வேதங்கள் துதி செய்யவும், எதிர்த்து வந்த பீர்க் களத்திலே எல்லாத் திசைகளிலுந் தேடிச் சென்று, கூற்றுவனார் தசைகளுடன் ஆடவும், வலிய நரிகள் ஆடவும், பேய்கள் ஆடவும், காகங்கள் ஆடவும், போரில் மோதி வருகின்ற பூதக் கூட்டங்கள் ஆடவும், ஒளி வீசவும், கூரிய வேலாயுதத்தை விட்டவரே! ஒப்பற்ற மான் போன்றவரும், தினைப்புனத்தைக் காவல் புரிவதில் வல்ல நாகணவாய்ப் பறவை போன்றவரும் ஆன வள்ளிபிராட்டியாரை ஏமாற்றி, அவருடைய உள்ளத்தை அலைத்த காமுகரே! குகமூர்த்தியே! சிவபெருமானுடன் இரத்தினகிரியில் வாழுகின்ற முருகக் கடவுளே! இளம் பூரணரே! தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே! சூழ்ந்துள்ள வஞ்சனைகள் பலவும், சூது நிறைந்த செயல்கள் பலவும் கற்ற, களவுடைய பழிகாரரும் கொலைகாரரும் ஆகிய மாதருடன் கூடிச் சலிப்புற்று அலைந்து அலைந்து வீணான பெருமையுடன் துன்பக் கடலில் முழுகி, அதனால் துயரத்தை அடைந்த, கவலை தரும் குடும்பம் என்னும் கடலில் மீன்போல் அலைந்தும், கூழில் விழுந்த குப்பைபோலக் கிடந்தும், மூண்டு எரியும் பெரிய நெருப்பில் இட்ட மெழுகு போல் உருகும் உடல்-தூய்மையில்லாத சுமையான உடல்-இத்தகைய உடலில் பொருந்திய மெய் வாய் கண் நாசி செவி என்ற ஐம்பொறிகளால், சிறிதும் மதியாமல் வலிமையான காலன் வருங்காலத்தில், இந்த இடர் வருகின்றதே என்று அறியாமல் ஓடியாடி வருகின்ற சூதாடிகளான சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற |