பக்கம் எண் :


52 திருப்புகழ் விரிவுரை

 

" யார் வேண்டினாலுங் கேட்ட பொருள்யீயும்
         த்யாகாங்க சீலம்போற்றி”               -(நாகங்க) திருப்புகழ்

" வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
         வேண்டு மளவி லுதவும்                   பெருமாளே”
                                        -(கோங்கை முகையு) திருப்புகழ்

   “அடியவ ரிச்சையி வெவை யென யுற்றன
       அவை தருவித் தருள்”           -(கலகலெனச்சில) திருப்புகழ்

என்ற அமுத வாக்குகளை உன்னுக.

கருத்துரை

வள்ளி மணவாளா! விசாகா! சரவண! வடவேங்கடத்தில் வாழும் வள்ளலே! மோகாசையால் வாடி வறிதே அடியேன் காலன் வசப்பட்டு மடியாவண்ணம் ஆட்கொள்வீர்.

11

      வரிசேர்ந்திடு சேல்கய லோவேனு
           முழைவார்ந்திடு வேலையு நீலமும்
           வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள்         வலையாலே
      வளர்கோங்கிள மாமுகை யகிய
           தனவாஞ்சையி லேமுக மாயையில்
           வளமாந்தளிர் போல்நிற மாகிய                வடிவாலே
      இருள் போன்றிடு வார்குழல் நீழலில்
           மயல் சேர்ந்திடு பாயலின் மீதுற
           இனிதாங்கனி வாயமு துறல்கள்                  பருகாமே
      எனதாந்தன தானவை போயற
           மலமாங்கடு மோகவி காரமு
           மிவை நீங்கிட வேயிரு தாளினை         யருள்வாயே
      கரிவாம்பரி தேர்திரள் சேனயு
           முடனாந்துரி யோதன னாதிகள்
           களமாண்டிட வேயொரு பாரத                   மதிலேகிக்
      கனபாண்டவர் தேர்தனி லேயெழு
           பரிதூண்டிய சாரதி யாகிய
           கதிரோங்கிய நேமிய னாமரி                       ரகுராமன்
      திரைநீண்டிரை வாரியும் வாலியும்
           நெடிதோங்கும் ராமர ரமேழொடு
           தெசமாஞ்சிர ராவண னார்முடி               பொடியாகச்