தலவிளக்கம் 1. ஸ்ரீசைலம் ஆந்திர நாட்டில் கர்நூல் ஜில்லாவில் உள்ளது. ஓங்கோல், குண்டூர், குண்டக்கல், கர்நூல், திருப்பதி ஆகிய ஊர்களிலிருந்து நேர் பஸ் வசதி உண்டு. எல்லா வசதிகளும் உண்டு. சிவராத்திரியில் தரிசனம் செய்ய ஏராளமான மக்கள் செல்வர். 2. திருவேங்கடம் என்னும் தலம் திருப்பதி-திருமலை என வழங்கப்படும் பிரபல க்ஷேத்திரம். ஆந்திர நாட்டில் உள்ளது. இப்பொழுது முருகன் கோயில் மறைந்து திருமால் திருப்பதியாக விளங்குகின்றது. சென்னையிலிருந்து புகைவண்டி அல்லது பஸ் மூலம் செல்லலாம். எல்லா வசதிகளும் நிறைந்தது. 3. திருத்தணி என்னும் தலம் சென்னையிலிருந்து, பம்பாய் போகும் புகைவண்டி வழியில் அரக்கோணம் புகைவண்டி நிலையத்திற்கடுத்தாற்போல் உள்ளது. சென்னையிலிருந்து புகைவண்டி மூலமும் பஸ் மூலமும் செல்லலாம். எல்லா வசதிகளும் உள்ள பட்டினம். மற்றும் இத்தலத்தின் விசேடங்கள் எல்லாம் புத்தகத்தில் விரிவுரைப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. |