பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 55

 

கரிவாம் பரி:-

வாம்-வாவுதல்-தாவிதல். தாவியோடுகின்ற குதிரைகள்.

பரி தூண்டிய சாரதி:-

கண்ணபிரான் அர்ச்சுனனுடைய தோழமைக்காகத் தேர்ப்பாகனாகி, அவனுடைய தேரைச் செலுத்தி, அவனுக்கு வெற்றியை யுண்டாக்கினார்.

கருத்துரை

திருமால் மருகரே! திருவேங்கடமலையில் வாழும் குகமூர்த்தியே! உலக மயல் நீங்கத் திருவடியை யருள்வீர்.

12

      சரவண பவநிதி யறுமுக குருபர
           சரவண பவநிதி யறுமுக குருபர
           சரவண பவநிதி யறுமுக குருபர                 எனவோதித்
      தமிழினி லுருகிய அடியவ ரிடமுறு
           சனனம ரணமதை யொழிவுற சிவமுற
           தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற       அருள்வாயே
      கருணைய விழிபொழி யொருதனி முதலென
           வருகரி திருமுகர் துனைகொளு மிளையவ
           கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற  அருள்நேயா
      கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
           கலகமி னையதுள கழியவும் நிலைபெற
           கதியு முனதுதிரு வடிநிழல் தருவது            மொருநாளே
      திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
           குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
           சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய      வடிவேலா
      தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
           மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
           திமிரம லமொழிய தினகர னெனவரு      பெருவாழ்வே
      அரவணை மிசை துயில் நரகரி நெடியவர்
           மருகென னவெவரு மதிசய முடையவ
           அமலிவி மலிபரை உமையவ ளருளிய       முருகோனே
      அதல விதமுதுல் கிருகிடு கிடுவென
           வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
           அழகி னுடனமரு மரகர சிவசிவ                பெருமானே