பக்கம் எண் :


56 திருப்புகழ் விரிவுரை

 

பதவுரை

திரிபுரம் எரிசெயும் இறையவர்=முப்புரங்களை எரித்த சிவபெருமான், அருளிய குமர=பெற்றருளிய குமாரக் கடவுளே! சமரபுரி=திருப்போரூரிலும், தணிகையிலும்= திருத்தணியிலும், மிகும் உயர் சிவகிரியிலும்=மிகவும் உயர்ந சிவகிரியிலும், வடமலையிலும் உலாவிய=திருவேங்கட மலையிலும் உலாவுகின்ற, வடிவேலா=கூரிய வேலாயுதரே! தினமும்=நாள் தோறும், உனது துதி பரவிய அடியவர்=தேவரீருடைய புகழைக் கூறும் அடியார்களின், மனது குடியும்=உள்ளக் கோயிலில் குடி கொண்டிடும், இரு பொருளிலும் இலகுவ=அருட்செல்வம் பொருட்செல்வம் என்ற பொருள்களிலும் விளங்குபவரே! திமிர மலம் ஒழிய=இருண்ட ஆணவமாகிய மலம் ஒழிய, தினகரன் எனவரு=ஞானசூரியன் என்னும்படி வருகின்ற, பெருவாழ்வே=பெரிய வாழ்வே! அரவு அணமிசை தியில்=பாம்பணையில் அறிதுயில்  புரிகின்றவரும், நரகரி=நரகாசுரனைக் கொன்றவரும், நெடியவர்=நீண்ட வடிவுள்ளவரும் ஆகிய திருமாலின், மருகன் என வரும் அதிசயம் உடையவ=மருகர் என்று கூறுமாறு வந்துள்ள அதிசய மூர்த்தியே! அமலி=மலம் அற்றவரும், விமலி=மலம் இல்லாதவரும், பரை=பெரியோரும் ஆகிய, உமையவள் அருளிய=உமாதேவியார் தந்தருளிய, முருகோனே=முருகக்கடவுளே! அதல விதல முதல் கிடுகிடுகிடு என வரும்=அதலம் விதலம் முதலிய ஏழுவுலகங்களும் கிடுகிடுகிடு என்று நடுங்க வருகின்ற, மயிலின் இனிது ஒளிர்=மயிலின்மீது இனிதாக ஒளி செய்பவரே! ஷடுமையில் நடு உற=ஆறுகோண சக்கரத்தின் நடுவில், அழகினுடன் அமரும்=அழகுடன் பொருந்தியுள்ள, அர ஹர சிவ சிவ=ஹர ஹர, சிவ சிவ! பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! குருபர=குருபர! சரவணபவ=சரவணபவ, நிதி=நிதியே! அறுமுக=ஆறுமுகக் கடவுளே! குருபர=குருபர! என ஓதி=என்று பலமுறை ஓதி, தமிழினில் உருகிய=தமிழ்க் கவிகளில் உள்ளம் உருகிய, அடியவர் இடம் உறு=அடியார்களுக்கு உற்ற, சனன மரணம் அதை ஒழிவு உற=பிறப்பு இறப்பு என்பவை நீங்குதலையடையவும், சிவம் உற=சிவப்பேறு அடையவும், தருபிணிதுள=வினைகள் தருகின்ற துன்பமானது துள்ளி ஓடவும், எமது உயிர் சுகம் உற=எங்கள் உயிர் இன்பம் அடையவும், வரம் அருள்வாயே=வரத்தை வழங்குவீர், விழி பொழி கருணைய= கண்களினின்றும் பொழிகின்ற கருணையைக் கொண்டவரே! ஒருதனி முதல் எனவரு= ஒப்பற்ற தனிப்பெருந் தலைவன் என வந்த, கரி திருமுகர் துணை கொளும் இளையவ=யானையின் திருமுகத்துடன் விளங்கும் விநாயக மூர்த்தியைத் துணையாகக் கொண்ட இளையவரே! கவிதை அமுதமொழி தருபவர்=கவிதைகளாகிய அமுத மொழியை வழங்குபவர்களுடைய, உயிர் பெற அருள் நேயா=உயிர் நற்கதி பெற அருள் புரிகின்ற நேசமுடையவரே! கடல் உலகினில் வரும்=கடல் சூழ்ந்த உலகில் தோன்றும், உயிர் படும் அவதிகள்=உயிர்கள் அடைகின்ற துன்பங்களும், கலகம்=கலகங்களும், இனையது உள கழியவும்=இன்னும் இத்தகையவாய் உள்ள வேதனைகளும் நீங்குதலையும், நிலைபெற கதியும்=நிலைபெறுமாறு நற்கதி பெறுதலையும், உனது திருவடி