பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 57

 

நிழல் தருவதும்=உமது திருவடி நிழல் தருவதும் ஆகிய, ஒருநாளே=ஒருநாள் எனக்கு கிடைக்குமோ?

பொழிப்புரை

முப்புரங்களையும் எரித்த சிவபெருமானுடைய புதல்வரே! திருப்போருரிலும் திருத்தணிகையிலும், மிகவுயர்ந்த மகிமையுள்ள சிவகிரியிலும், திருவேங்கட மலையிலும் உலாவுகின்ற வடிவேலவரே! தினந்தோறும் உமது புகழைப் பரவுகின்ற அடியார்களின் உள்ளத்தில் குடிகொண்டு, அருட்செல்வம், பொருட்செல்வம் என்ற இரு செல்வங்களிலும் விளங்குபவரே! இருள் மயமான ஆணவமலம் நீங்க ஞான சூரியனாக வருகின்ற பெருவாழ்வே! பாம்பணையில் அறிதுயில் கொண்டவரும், நரகாசுரனை வதைத்தவரும் நெடுயவருமாகிய நாராயனரது திருமருகன் என்று கூறும் அதிசயம் உடையவரே! மலாகிதராகிய பராசக்தியாம் பார்வதி தேவி பெற்ற முருகக் கடவுளே! அதல விதல முதலிய உலகங்கள் கிடு கிடு என்று நடுங்குமாறு வருகின்ற மயிலினில் ஒளிர்கின்றவரே!
               ஆறு கோணத்தின் நடுவில் அழகுடன் அமர்கின்றவரே! ஹரஹரா! சிவசிவா! பெருமிதம் உடையவரே! ‘சரவணபவ! நிதியே! ஆறுமுகா! குருபர! ‘சரவணபவ! நிதியே! ஆறுமுகா! குருபர! ‘சரவணபவ! நிதியே! ஆறுமுகா! குருபர!’ என்று தமிழினில் துதி செய்து உருகும் அடியார்களின் பிறப்பு இறப்பு நீங்கவும், சிவப் பேறு பெறவும், நோய்கள் துள்ளி ஓடவும், எமது உயிர் இன்பமுறவும் அருள்புரிவீர்; கண்களில் பொழிகின்ற கருணை யுடையவரே; ஒப்பற்ற தனிப்பெருந் தலைவராம் யானை முகவரது துணையை நாடும் இளையவரே! கவிதையாம் அமுத மழை பொழிகின்றவருடைய உயிர் நற்கதி பெற அருள்பவரே! கடல் சூழ்ந்த உலகினில் தோன்றுகின்ற உயிர்கள் படுகின்ற துன்பங்கள் கலக்கம் முதலிய இடர் அகலவும், நிலைபெறவும், நற்கதியும் தேவரீருடைய திருவடி தருவதுமாகிய நாள் ஒன்று அடியேனுக்கு உண்டாகுமோ?

விரிவுரை

சரவணபவ:-

சரம்-தர்ப்பை; வனம்-காடு. பவன்-வெளிப்பட்டவன்.

ரகரத்தின் பின்வரும் னகரம் ணகரமாகத் திரியும் என்பது வியாகரண விதி; அதனால் சரவனம் என்பது சரவணம் ஆயிற்று.

நிதி:-

இறைவன் என்றும் அழியாத சேமநிதி.