பக்கம் எண் :


60 திருப்புகழ் விரிவுரை

 

                கனதன பரிமள முழுகுப னிருபுய
                கனகதி வியமணி                           யணிமார்பா
      கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்
                பட்சிக் கக்கொட் டசுராதி
      கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
                கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
                கடவட மலையுறை                         பெருமாளே.

பதவுரை

நச்சு து=விடத்தை உண்ட வீமசேனன், சொப்பிச்சு=இறவாமல் சோபித்து விளங்கவும், குட்டத்து உள் தாக்கு=நீர்நிலையினுள் தங்கும்படி, அட்டத்து=குறுக்கே வைத்திருந்த, அசி காண=வாள் முனைகள் அப்பீமன் காணும்படியும், நடத்தி=அவனுக்கு அருள் புரிந்தும், விடத்தை உடைத்த=நஞ்சடைய காளிங்கன் என்னும் பாம்பின், படத்தினில்=பணாமகுடத்தின் மீது நின்று, நட நவில்=நடனம் புரிந்தும், கடல் இடை அடுபடை தொடு=சமுத்திரத்தை வற்றச் செய்யும் பாணத்தைத் தொடுத்த, முகில்=நீலமேக வண்ணரும், நகைமுக திரு உறை=சிரித்த முகத்தையுடைய இலக்குமிதேவி உறைகின்ற, மணிபார்பன்=அழகிய மார்பினரும், நத்தத்தை=சங்கையும், சக்ரத்தை=சக்ராயுதத்தையும், பத்ம கை பற்றி=தாமரை போன்ற திருக்தரத்தில் ஏந்தி, பொரு மாயன்=போர் புரிகின்ற மாயத்தில் வல்லவரும், நரிக்கும்=நரிக்கும், அரிக்கும்=வாளுக்கும், எரிக்கும்=நெருப்புக்கும், விருப்பு உற=விருப்பமுண்டாகுமாறு, நசிதரும் நிசிதரும் உடகுடல் இடல் செய்த=அழிவைச் செய்யும் அசுரர்களது குடலை உணவாகத் தந்தருளிய, நரகரி=நரகாசுரனைக் கொன்றவரும் ஆகிய திருமாலின், ஒரு திரு மருகோனே=ஒப்பற்ற அழகிய மருகரே! கச்சு தச்சு பொன் கட்டிட்டு=அழகிய இரவிக்கையைத் தைத்து முடியிட்டுக் கட்டி, பட்டுக்கு உட்பட்டு=பட்டுத்தாவணிக்குஉட்பட்டதாய், அமுதாலும்=அமுதம் நிறைந்து அசைவதாய், கருப்பு இரசத்தும் உருச் செய் துவைச்சிடும்= கரும்பின் சாற்றினால் செய்து அமைத்த்தாய் விளங்கும், கனதன=(வள்ளி நாயகியின்) பருத்த கொங்கைகளின், பரிமள முழுகு பன்இருபுய=நறுமணத்தில் முழுகும் பன்னிரண்டு புயங்களையுடையவரே! கனக திவிய மணி அணி=பொன்னில் அழகாகப்பதித்த இரத்தின மணிகளைத் தரித்த, மார்பா=மார்பினரே! கை சத்திக்கு=கையில் விளங்கும் வேலாயுதமானது, கெற்சித்து=ஆரவாரித்து, ஒக்க பட்சிக்க=முழுவதும் உண்ணும்படி, கொட்டு அசுர ஆதி=வாத்தியத்தை முழக்கிக் கொண்டு வந்த அசுரர் தலைவனாம் சூசபன்மனை, கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு=கரிய நிறமுடைய அரக்கர் கூட்டத்துடன், கறுவிய சிறியவ=கோபித்த இளம் பூரணரே! கடவைகள் புடைபடு கட=வழிகள் பக்கங்களில் உள்ள காடுகள் சூழும், வடமலை உறை=வடவேங்கடமலையில் வாழ்கின்ற, பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! நெச்சு பிச்சி புட்ப தட்ப=நெய்.