பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 61

 

பொருந்தியுள்ள பிச்சிப்பூவின் குளிர்ச்சியைக் கொண்டதாயும், கச்சி கச்சுற்று=ஒழுங்காய் கட்டப்பட்டதாயும், அறல் மேவி=கருமணலை நிகர்த்தும், நெறித்து=சுரண்டும், வெறித்து= மணமுடையதும், இருட்டை வெட்டிய=தனக்குள்ள கரு நிறத்தால் அச்சுறுத்தியதும், நிரைதரு மருமலர் செருகிடுவரிசையாய் வாசனையுள்ள மலர்கள் சொருகியியுள்ள, பரிமள நிறை உறை=நல்ல வாசனையில் நிரம்ப உறைகின்ற, மதுகரம் நெடிது ஆடி=வண்டுகள் நெடுநேரம் மொய்த்து மகிழவும், நிச்சிக்கு (நிசிக்கு) அச்சப்பட்டு=இரவுக்கு பயத்தையளித்து, சிக்கு அற்று=சிக்கல் இல்லாததும், ஒப்புக்கு உயர்வு அடைந்து, நெறித்த சுளி்த்த=வளைவும் சுருளும் உடையதாய், விழைக்குள் அழைத்து=விருப்பத்தைத் தந்து அழைப்பதாய், மைநிகர் என=மையை ஒத்ததாய், அகருவும் உகுபுகை தொகுமிகு=அகிலின் புகையின் தொகுதி மிகுந்து, நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும்=விளங்குகின்ற புனுகு சட்டம் கமழ்கின்றதும் ஆகிய கூந்தலின் மீதும், வச்ரப்பச்சை பொட்டு இட்டு=வஜ்ரம்போல் ஒளிதரும் பச்சைப் பொட்டினை நெற்றியில் இட்டு, அப்பொட்டு்க்கு உள்=அந்தப் பொட்டின் இடையில், செக்கர்ப்ரபைபோல்=சிவந்த பிரபைபோல, வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்கு மன்=வளைவும் செழிப்பும் உள்ள நிலாப் பிறைக்கு ஒப்பாக உறைவதாய், மத சிலை அது என=மன்மதனுடைய வில்லென்று சொல்லத்தக்கதாய், மகபதி தனு என்=இந்திரவி்ல் என்னும் படியும், மதி திலதமும் வதி=வளைந்த பிறைச்சந்திரனைப் போன்ற திலகம் உள்ள, நுதல் மேலும்=நெற்றியின் மீதும், மச்ச=உடம்பிலுள்ள மச்சங்களின் மீதும், செச்சை சித்ர=சிவந்த விசித்திரமான, சத்ர பொன் பக்கத்தில்=அதிசயிக்கத்தக்க அழகிய உடற்பக்கங்களிலும், இச்சையனாகி=விருப்பங் கொண்டவனாய், மனத்தின் அனைத்தும் அணைத்த=மனதில் நினைத்தவை யாவையும் தரவல்ல, துணைபதமலர் அலது=இரண்டு மலரடியன்றி, இலைநிலை என மொழிதழிய=நிலை வேறு இல்லை யென்னும் மொழிகளைத் தழுயவி, மெய்வழிபடல் ஒழிவனை=உண்மையான வழிபாடு செய்வதை ஒழித்த, அடியேனுக்கு அருள்வாயே=அடியேனுக்கு அருள் புரிவீராக,

பொழிப்புரை

நஞ்சினையுண்ட பீமன் அவ்விடத்தால் அழியாது நலம் பெறவும், நதியில் நாட்டியிருந்த வசிகளை அவன் கண்டு அதனின்றும் தப்பித்து அவன் பிழைக்க அருளியும், விஷம் கக்குமாறு காளிங்கன் என்ற பாம்பின் படத்தின் மீது நடித்தும், சமுத்திரத்தின் மீது கணையைச் செலுத்தியும் அருளிய நீலமேக வண்ணரும் புன்னகையுடைய திருமுகம் தாமரை போன்ற கரங்களில் ஏந்திப் போர்புரியும் மாயாவல்லபரும், நரிகட்கும் வாளுக்கும் நெருப்புக்கும் அரக்கர்களின் குடலை உணவாக இட்டவரும் நரகாசுரனைக் கொன்றவருமாகிய ஒப்பற்ற