பக்கம் எண் :


64 திருப்புகழ் விரிவுரை

 

கடலிடையடுபடை தொடுமுகில்:-

இராமாவதாரத்தில் வருணைனை வழிவிட வேண்டியும் அவன் வந்து உதவாமையால், அக்கினிக் கணையைக் கடலின் மீது ஏவி, கடலை நடுங்குமாறு செய்தார்.

நத்தத்தை:-

நத்து-சங்கு. திருமால் பாஞ்சஜன்யம் என்ற அரிய சங்கத்தைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளார். அதம் மூலம் பிரணவ நாதத்தையுண்டாக்குவார்.

சக்ரத்தைப் பத்மத்தைக் கைப்பற்றி:-

 திருமால் கொடிய அரக்கர்களைக் கொன்று உத்தமரை உய்விக்கும் பொருட்டு தாமரைக் கரத்தில் சக்ராயுதத்தைத் தாங்கியுள்ளார். கத்மத்தை-என்ற சொல்லில் அத்து ஐ என்ற இரண்டும் சாரியை.

நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விரப்புற நசிதரு நசிசரருடகுடல் இடல் செய்த:-

திருமால் கொடியவர்களான அரக்கர்களைச் சக்ராயுதத்தால் கொன்று, அவர்களுடைய கொழுத்த குடல்களை நரிக்கும் வாளுக்கும் நெருப்புக்கும் விருந்து வைத்தருளினார்.

நரகரி:-

நரகன் என்ற அரக்கனைக் கொன்றவர் நரகரி,

கைச்சத்திக்குக் கெற்சித் தொக்கப் பட்சிக்க:-

முருகவேள் சூராதியவுணர்களின் குலத்தைக் கொன்று வேலாயுதத்துக்கு விருந்து வைத்தருளினார்.

கருத்துரை

திருமாலின் திருமருகரே! திருவேங்கடமலை நாதரே! உமது திருவடியில் வழிபடுமாறு     திருவருள் புரிவீர்.

திருத்தணிகை

14

      அரகர சிவனரி அயனிவர் பரவிமு
            னறுமுக சரவண                              பவனேயென்
      றநுதின மொழிதர அசுரர்ககள் கெடஅயில்
          அனலென எழவிடு                                  மதிவீரா