பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 65

 

      பரிபுர கமலம தடியிணை யடியவர்
           உளமதி லுறவருள்                                முருகேசா
      பகவதி வரைமகள் உமைதர வருகுக
           பரமன திருசெவி                                    களிகூர
      உரைசெயு மொருமெரி பிரணவ முடிவதை
           உரைதரு குருபர                                    உயர்வாய
      உலகம னலகில உயிர்களு மிமையவ
               ரவர்களு முறுவர                           முநிவோரும்
      பரவிமு நநுதின மனமகழ் வுறவணி
           பணிதிகழ் தணிகையி                     லுறைவோனே
      பகர்தரு குறமகள் தருவமை வனிதையு
           மிருபுடை யுறவரு                               பெருமாளே.

பதவுரை

அரசர சிவன்=பாவங்களைப் போக்க வல்லவராகிய சிவனும், அரி=நாராயணரும், அயன் இவர்=பிரமாவும் ஆகிய இம் மூவர்களும், பரவி=போற்றி நின்று, முன்=உமது திருமுன்னிலையில், அறுமுக=ஆறுமுகக் கடவுளே! சரவணபவனே என்று=சரவணபவனே என்று  கூறி, அநுதினம் மொழிதர=நாள்தோறும் துதிக்க, அசுரர்கள் கெட=சூராதியவுயர்கள் அழியுமாறு, அனல் என எழ அயில் விடு= அக்கினிபோல் செல்ல வேலாயுதத்தை விடுத்தருளிய, அதிவீரா=மிகுந்த வீரமூர்த்தியே! பரிபுர கமலம் அது=சிவப்பு அணிந்த தாமரை மலர் போன்ற, அடி இணை=இரு திருவடிகளையும், அடியவர் உளம் அதில் உற=அடியார்களின் உள்ளத்தில் பொருந்துமாறு, அருள்=அருள்புரிகின்ற, முருக ஈசயா=முருகக் கடவுளே! பகவதி=ஆறு குணங்களையுடையவரும், வரைமகள்=மலையரசன் புதல்வியும் ஆகிய, உமை தரவருகுக=உமாதேவியார் அருளவந்த குகமூர்த்தியே! பரமனது இரு செவி களிகூர=பரமசிவத்தின் இரண்டு செவிகளும் மகிழ்ச்சி கொள்ளும்படி, உரைசெயும் ஒரு மொழி=எல்லோராலும் புகழப்பெற்ற ஒரு மொழியாகிய, பிரணவ முடிவு அதை=பிரணவமந்திரத்தின் முடிவுப் பொருளை, உரைதரு குரபர=உபதேசித்த மேலான குருநாதரே! உயர்வு ஆய உலக மன்=சிறப்பு பொருந்திய உலகத்தில் நிலை பெற்றுள்ள, அலகில உயிர்களும்=கணக்கற்ற உயிர்களும், இமையவர் அவர்களும்=தேவர்களும், முறுவர=முணுமுணுக்கும்படி, முநிவோரும்=முனிவர்களும் பரவிமுன்=திருமுன் நின்று துதி செய்து, அநுதினம் மனம்மகிழ் உற=நாள்தோறும் மனம் மகிழ்ச்சியடையுமாறு, அணி=அழகியதும், பணி திகழ்=வாசுகி என்ற நாகம் வழி பட்டதுமாகிய, தணிகையில் உறைவோனே=திருத்தணிகையில் உறைகின்றவரே! பகர்தரு குறமகள்=புகழப்பெறும் வள்ளியம்மையும், தருஅமை வனிதையும்=கற்பகமரத்தின் கீழ் வளர்ந்த தெய்வயானை.