பக்கம் எண் :


66 திருப்புகழ் விரிவுரை

 

யம்மையும், இருபுடை உறவரு=இருபக்கங்களிலும் பொருந்த எழுந்தருளியிருக்கும், பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே!

பொழிப்புரை

பாவங்களை அழிக்கவல்ல அரனும் அரியும் அயனும், திருமன் நின்று, “ஆறுமுகக் கடவுளே! சரவண பவனே” என்று நாள்தோறும் கூறி துதி செய்ய, சூராதி யவுணர்கள் அழியுமாறு அக்கினி எழுந்ததுபோல் செல்ல வேலாயுதத்தை விடுத்தருளிய மிகுந்த வீரமூர்த்தியே! சிலம்பு அணிந்த தாமரை மலர் போன்ற இருதிருவடிகளை அடியார்களின் உள்ளத்தில் பொருந்த அருளும் முருகக் கடவுளே! மலையரன் மகளாக வந்த பகவதியாகிய உமையம்மையருள வந்த குகப்பெருமானே! பரமசிவத்தின் இரண்டு செவிகளும் மகிழும்படி, யாவரும் புகழ்கின்ற ஒப்பற்ற மொழியாகிய பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை உபதேசித்த சிறந்த குருமூர்த்தியே! சிறந்த இவ்வுலகில் நிலைபெற்ற எண்ணில்லாத உயிர்களும் முணுமுணுக்க முனிவர்களும் துதி செய்து திருமுன் தினந்தோறும் உள்ளம் மகிழுமாறு அழகியதும், நாகராஜன் வழிபட்டதுமாகிய திருத்தணிகை மலைமீது வசிக்கின்றவரே! புகழ்பெற்ற வள்ளிநாயகியும், கற்பக மரத்தின் கீழ் வளர்ந்த தெய்வயானையம்மையும் இருபுறத்தில் பொருந்த எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

விரிவுரை

அரகர:-

அர-பாவங்களை நீக்குபவர்.

சிவபெருமானுடைய திருநாமங்களில் சிறந்தது அரனாமம். ஹர ஹர என்று கூறுவோர் இடர் நீங்கப் பெறுவர். சபைகளில் அடியார்கள் ஹர ஹர என்று முழக்கம் புரிவர்.

“அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் நீக்கவே”

என்கின்றார் திருஞானசம்பந்தர்.

“வருசிவனடியார் ஹரஹர எனமுறை
   வழங்கு கடல்போல் முழங்க ஒருபால்”              -கொலுவகுப்பு

இறைவன் நமக்கு நாவைத் தந்தான் மென்மையுடையதாகவும், ஈரமுள்ளதாகவும் தந்தான் இன்னும் ஒரு பெரிய உபகாரம். நாவை நரம்பு வைக்காமல் படைத்தான் ஏன்? நரம்பு உள்ள பகுதிகளாகிய கை, கால், கழுத்து இவைகளில் சுளுக்கு