பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 69

 

பரவிமு னனுதினம் மனமகிழ் வுறவணி

உலகில் உள்ள சகல உயிர்களும், தேவர்களும், முனிவர்களும், திருத்தணிகை மலையில் வந்து முருகனை நாள்தோறும் துதி செய்து வழிபடுகின்றார்கள்.

பணிதிகழ் தணிகை:-

திருப்பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகராஜன் கயிறாக இருந்தான். அதனால் அவன் உடம்பு புண்ணாகியது. வாசுகி திருத்தணி மலைக்கு வந்து முருகவேளைப் பூசித்து நோய் நீங்கப் பெற்றான்.

“விஷஐந்து தலையரவு தொழுகின்ற தணிமலை”
                                        - (முலைபுளக) திருப்புகழ்.

பகர்தரு குறமகள் தருவமை வநிதையும் இருபுடை யுறவரு பெருமாளே:-

வள்ளியும் தெய்வயானையும் வலமும் இடமும் விளங்க முருகவேள் திருத்தணியில் எழுந்தருளியிருக்கின்றார். வள்ளி-இச்சாசக்தி; தெய்வயானை- கிரியாசக்தி.

நமக்கு வேண்டிய நலன்கள் இரண்டு. இகபரம் ஆகும். இகத்தில் உள்ள நலன்கள் அனைத்தும் இம்மண்ணுலகில் தோன்றி வளர்ந்த வள்ளியம்மையார் மூலம் அப்பன் அருளுவான். பரத்துக்குரிய நலன்கள் அனைத்தையும் விண்ணுலகில் தோன்றி வளர்ந்த தெய்வயானையம்மையாரைக் கொண்டு அருளுவான். மூன்றாவது நலமாகிய முத்திப் பேற்றினை வேலைத் தாங்கிய விமலன் தானேயருளுவான்.

இப்பாடல் துதிமயமானது. வேண்டுதல் ஒன்றும் இல்லாது தனதன தனதன என்ற குறில் எழுத்துக்களால் ஆன நடையுடைய பாடல்.

கருத்துரை

மூவர் தொழும் முருகா! சூரனையடக்கிய வீரனே! சிவகுரு நாதா! தணிகேசா!

15

      இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
           இடுக்கினை யறுத்திடு                         மெனவோதும்