பகைத்த அரக்கர் சிரமத்தை யறுத்து படர்ச்சி கருத்த மயிலேறிப் பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தனமாதை மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து வெளுத்த பொருப்பி லுறைநாதா விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க ம்ருகத்தை யெடுத்தொர் பெருமாளே. பதவுரை பகைத்த அரக்கர்=பகை கொண்டு வந்த அசுரர்களின், சிரத்தை அறுத்து= தலைகளை அறுத்து, படர்ச்சி கறுத்த மயில் ஏறி=படர்ந்து உள்ள கருநிறம் படைத்த மயிலின் மீது ஆரோகணித்து, பணைத்த கரத்த=பருமைத் தன்மையுடையதும், குணத்த மனத்த=குணமான நன் மணம் பொருந்தியதும், பதத்த கனத்த=பக்குவநிலை யெய்தி பெருமை பெறதும் ஆகிய, தன மாதை=தனங்களையுடைய குற மகளை, மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து=சிறந்த தினைப்புனத்தில் வைத்துத் தழுவி, வெளுத்த பொருப்பில் உறை நாதா=வெள்ளி மலையில் வாழ்கின்ற தலைவரே! விரித்த சடைக்கு உள்=விரித்துள்ள சடா பாரத்தினுள், ஒருத்தி இருக்க=கங்காதேவி உறைய, ம்ருகத்தை எடுத்தொர்=மானைக் கரத்தில் ஏந்திய சிவபெருமானுக்கு உரிய, பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! நகைத்து உருக்கி=புன் சிரிப்புச் செய்து மனதை உருகச் செய்து, விழித்து மிரட்டி=நன்கு விழித்துப் பார்த்து மிரளுமாறு செய்து, நடித்து= பொய்மையாக அன்புள்ளாரைப்போல் நடித்து, விதத்தில் அதிமோகம் நடத்து= விதவிதமாக அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற, சமத்தி=சாமர்த்தியத்தைக் காட்டி, முகத்தை மினுக்கி=முகத்தை மஞ்சள் முதலியன இட்டு மினுக்கி, நலத்தில் அணைத்து= நலமிக்க படுக்கையிடத்தில் தழுவி, மொழியாலும்=பேச்சின் திறத்தினாலும், திகைத்த வரத்தில்=திகைக்கச் செய்து கேட்ட வரத்தின்படி, அடுத்த பொருள் கை திரட்டி=கிடைத்த பொருள்களைச் சேகரித்துக் கொண்டு, எடுத்து வரவே செய்=எடுத்துக் கொண்டு வருமாறு செய்கின்ற, திருட்டுமுலை பெண்=கரவுடைய தனங்களைப் படைத்த விலைமாதரின், மருட்டு வலைக்குள்=மயங்கச் செய்யும் ஆசைவலைக்குள்ளும், தெவிட்டு கலைக்குள்=நிறைந்த காம நூல்களிலும், விழுவேனோ=அடியேன் விழக் கடவேனோ? பொழிப்புரை பகைத்து வந்த சூராதி அவுணர்களின் தலைகளை யறுத்து, நீல நிறம் படர்ந்துள்ள மயிலின் மீது ஏறி, பருத்தும், குணமான நல்ல மணங் கமழப்பெற்றும், பக்குவப்பட்டுப் பெருமை பெற்றும் |