இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட னிலக்கண இலக்கிய கவிநாலுந் தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக தலத்தினில் நவிற்றுத லறியாதே தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ கருப்புலில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல் களிப்புட நொளித்தெய்த மதவேளைக் கருத்தினில் நினைத்தவ னெருப்பழ நுதற்படு கனற்கணி லெரித்தவர் கயிலாயப் பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு புறத்தினை யளித்தவர் தருசேய புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே. பதவுரை கரும்பு வில் வலைத்து=கரும்பு வில்லை வலைத்து, அணி மலர் கணை தொடுத்து=அழகிய மலர்க்கணைகளைத் தொடுத்து, இயல் களிப்புடன்=இயல்பாகவுள்ள செருக்குடன், ஒளித்து எய்த=ஒளித்திருந்து கணைகளைச் செலுத்திய, மதவேளை=வலிமை மிகுந்த மன்மதனை, கருத்தினில் நினைத்து=திருவுள்ளத்தில் நினைத்த மாத்திரத்தில், அவன் நெருப்பு எழ=அவன் தீயில் வேகுமாறு, நுதல் படு கனல் கணில் எரித்தவர்=நெற்றியில் உள்ள நெருப்புக் கண்ணால் எரித்தவரும், கயிலாய பொருப்பினில் இருப்பவர்=கயிலாய மலையில் எழுந்தருளியிருப்பவரும், பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர்=இமயமலையில் வளர்ந்த உமாதேவியாருக்கு இடப் பாகத்தைத் தந்தவரும் ஆகிய சிவபெருமான், தருசேய=தந்த பாலகரே! புயல் பொழில்=மேகந்தவழும் சோலைகளும், வயல்பதி நயம் படும்=வயல்களும் ஊர்களும் சிறந்துள்ள, திருத்தணி பொருப்பினில் விருப்பு உறு=திருத்தணிகை மலை மீது விருப்பங் கொள்ளும், பெருமானே=பெருமையில் மிகுந்தவரே! இருப்பு அவல்=இருப்பாக இருந்து வழிக்கு உதவுகின்ற அவை போன்ற, திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்= திருப்புகழானது அன்போடு ஓதுகின்ற அடியார்களின், இடுக்கினை அறுத்திடும்=துன்பங்களை அறுத்து ஒழிக்கும், என ஓதும்=என்று கூறுகின்ற, இசை தமிழ்=இசைத் தமிழ், நட தமிழ்=நாடகத் தமிழ், துறை என=அகப்பொருள் துறைகள் என்னும் வகையில், இலக்கண இலக்கிய=இலக்கணம் பொருந்தி இலக்கியத்தின் பாற்படும், கவி நாலும்=ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற நால்வகைக் கவிகளையும், விருப்புடன்=அன்புடன், தரிப்பவர்=உள்ளத்தில் தரிப்பவர்களும், உரைப்பவர்=பேசுபவர்களும், நினைப்பவர்= |