உமைக்கொரு புறத்தினை யளித்தவர்:- பார்வதிக்கு இடப்பாகந் தந்தவர், அர்த்தநாரீச்சுவரர். புயற்பொழில் வயற்பதி...........விருப்புறு பெருமாளே:- வளமையான பொழில், மேகந்தவழ்கின்ற உயர்ந்த வளமுடைய திருத்தணியில் விருப்போடு எம்பிரான் எழுந்தருளியிருக்கின்றார். கருத்துரை திருத்தணி முருகா! மாதர் மயக்கில் விழாது, திருப்புகழடியாரை போற்ற அருள் புரிவாய். உடலினூடு போய்மீளு முயிரினூடு மாயாத உணர்வி னூடு வானூடு முதுதீயு டுலவை யூடு நீருடு புவியி னூடு வாதாடு மொருவ ரோடு மேவாத
தனிஞானச் சுடரி னூடு நால்வேத முடியினூடு மூடாடு துரிய லாகு லாதீத சிவரூபம் தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை தொடுமு பாய மேதோசொ
லருள்வாயே மடல றாத வாரீச அடவி சாடி மாறான வரிவ ரால்கு வால் சாய அமராடி மதகு தாவி மீதோடி உழவ ரால டாதோடி மடையை மோதி யாறூடு தடமாகக் கடல்பு காம காமீனை முடுகி வாலை தான் மேவு கமல வாவி மேல்வீழு மலர்வாவிக் கடவுள் நீல மாராத தணிகை காவ லாவீர கருனை மேரு வேதேவர் பெருமாளே. பதவுரை மடல் அறாத=இதழ்கள் நீங்காத, வாரீச அடவிசாடி=தாமரைப் பூவின் காட்டை அழித்து, மாறான வரி வரால் குவால் சாய அமர் ஆடி=தனக்குப் பகையாக அங்கிருந்த வரிபடர்ந்த வரால் மீன் கூட்டங்கள் தோற்றுப் பின்வாங்கி ஓடும்படி போர்புரிந்து, மதகு தாவி மீது ஓடி=தான் செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத் தாவித் தாண்டி மேலே ஓடி, |