உழவரால் அடாது ஓடி=வயலில் உழுபவர்கள் தன்னை வருத்தாதபடி விலகி ஓடி, மடையைமோதி=வழியில் உள்ள நீர்மடைகளைத் தாக்கி, ஆறு ஊடு தடமாக=ஆற்றின் வழியே வழியாகச் சென்று, கடல்புகா=கடலில் புகுந்து, மகாமீனை முடுகி=அங்குள்ள பெரிய மீனை விரைந்து ஓடும்படித் தாக்கி, வாலை=வாளை மீன், தான் மேவு கமலவாவிமேல் வீழும்=தான் முன் இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும், மலர் வாவி=இத்தகைய அந்த மலர்ச்சுனையில், கடவுள் நீலம் மாறாத=தெய்வமணமுள்ள நீலோற்பல மலர் மலர்வது என்றும் தவறாத, தணிகை காவலா=திருத்தணிகைக்கு அரசே! வீர=வீர மூர்த்தியே! கருணை மேருவே=கருணையில் மேரு போன்றவரே! தேவர் பெருமாளே=தேவர்கள் போற்றும் பெருமையில் மிகுந்தவரே! உடலினூடு=உடல் உள்ளும், போய்மீளும் உயிரினூடும்=உடலில் சென்று மீளுகின்ற உயிரினூடும், மாயாத உணர்வினூடு=அழியாத உணர்ச்சியுள்ளும், வானூடு=ஆகாயத்துள்ளும், முது தீயூடு= முற்றிய தீயினுள்ளும், உலவை ஊடு=காற்றினுள்ளும், நீரூடு=தண்ணீரிலுள்ளும், புவியினூடு=மண்ணினுள்ளும். வாது ஆடு ஒருவரோடும் மேவாத=சமய வாதம் புரிகின்ற எவரிடத்திலும் காணக்கிடைக்காத, தனிஞானசுடரினூடும்=ஒப்பற்ற ஞான ஒளியினுள்ளும், நால்வேத முடியினூடும்=நான்கு வேதங்களின் உச்சியிலும், ஊடாடும்=ஊடாடுகின்றதும், துரிய=துரியமாய் நிற்பதும், ஆகுல அதீத=துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய, சிவரூபம்=சிவரூபத்தை, தொலைவு இலாத பேர் ஆசை=முடிவில்லாத பேராசையும், துரிசு அறாத=குற்றம் நீங்காத, ஓர் பேதை=ஒரு மூடனாகிய அடியேன், தொடும் உபாயம் ஏதோ=அடைதற்கு உரிய வழி எதுவோ? சொல் அருள்வாயே=அந்த உபதேசமொழியைச் சொல்லி அருள்புரிவீராக. பொழிப்புரை வாளை மீனானது மதகு வழியாகத் தாவிக் குதித்துச் சென்று, இதழ்களுடன் கூடிய தாமரைக் காட்டையழித்தும், தனக்கு மாறுபட்ட வரிவரால் கூட்டங்கள் தோற்றுப் போகுமாறு போர் செய்தும், வயலில் உழுபவர்கள் தன்னை வருத்தாதபடி விலகி ஓடியும், வழியில் உள்ள நீர் மடைகளைத் தாக்கியும், ஆற்றின் வழியே சென்று, கடலில் புகுந்து அங்கே வாழும் பெரிய மகர மீனை ஓடும்படிச் செய்தும், தான் வாழும் தாமரைக் குளத்துக்குத் திரும்பி வந்தது; இத்தகைய தணிகை மலையின் மீதுள்ள மலர்ச் சுனையில் தெய்வமணம் மாராத நீலோற்பல மலர் தவறாது மலரும். இந்தப் பெருமையையுடைய தணிகை மலைக்கு அரசே! வீரமூர்த்தியே! கருணையில் மேரு போன்றவரே! தேவர் போற்றும் பெருமிதம் உடையவரே! உடலினுள்ளும், உடலில் சென்று மீளுகின்ற உயிரினுள்ளும், அழியாத உணர்வினுள்ளும் விண்ணினுள்ளும், முற்றிய தீயினுள்ளும், காற்றினுள்ளும், |