1. உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும். 2. இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும். 3. பிறர் பொருளை விரும்பி நிற்பது ஆசையாகும். 4. எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை என்று பெயர். பற்று:- எந்தப் பொருளின் மீதும் பற்றின்றி நின்றவர்க்கே பிறப்பு அறும். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். -திருக்குறள். ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ -திருவாய்மொழி அவா:- உள்ளது போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர் துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும்; பிறப்பைக் கொடுக்கும். அவாவென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து அவாவில்லார்க்கு இல்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேல்மேல் வரும். -திருக்குறள். அவா என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி இம்மையிலும் இடையறாத இன்பத்தையடைவான். இன்பம் இடையறா தீண்டும், அவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின். -திருக்குறள் ஆசை:- பிறர் பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது. பிறருடைய மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால் மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை |