கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது கேட்டேன்; நீர் குதிரையைக் கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதன்று, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர். ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாங்கட்டி ஆளினும் கடல்மீதிலே ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் நெடுநாள் இருந்த பேரும் நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் நாவர்எல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவது மாகமுடியும் உள்ளதே போதும்நான் நானெனக் குளறியே ஒன்றைவிட் டொன்றுபற்றிப் பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலையையருள் வாய் பார்க்கும்இட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே. ஆசைச் சுழற்கடலில் ஆழாமல் ஐயாநின் நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. ஆசையெனும் பெருங் காற்றூடிலவம் பஞ்செனவுமன தலயுங்காலம் மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதுந் தூர்ந்து முத்திக்கான நேசமும்நல் வாசமும்போய்ப் புலன் நாயிற் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே! நிராசையின்றேல் தெய்வம் உண்டோ. -தாயுமானார். “பேராசை யெனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ” -கந்தரநுபூதி |