பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 83

 

உளமகிழ:-

செல்வர்கள் மனம் மகிழுமாறு அவர்களை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து பேசுவார்கள்.

ஆசுகவி பாடி:-

கவிகள் நான்கு; ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தார கவி. விரைந்து பாடுகின்றது ஆசுகவி எனப்படும்.

“நாலுகவி த்யாகா”                                                                           -அநுபூதி.

“ஆசுகவி முதலமொழிவன நிபுண மதுப முகரித மவுன
   முகுள பரிமள நிகில கவிமாலை”                 -சீர்பாதவகுப்பு

உமது புகழ் மேருகிரியளவு மானதெனவுரமுமான மொழிபேசி:-

ஒரு காசுங் கொடுக்க மனமில்லாத-அடுத்த வீட்டுக்குந் தெரியாத-பரம உலோபியைப் பார்த்து, “நீர் பெரிய கொடையாளி; கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கையையுடையவர்; அள்ளி வழங்குகின்ற வள்ளல்; பரமதாதா; தங்களின் புகழ் மேருகிரிபோல் உயர்ந்தது; மேருகிரிவரை பரவியுள்ளது” என்று புகழ்ந்து கூறுவார்கள்.

அதனால் புலவன், அகம் வாடி, முகம் வெளுத்து வருத்தமுற்றுத் தடுமாற்றம் அடைவான்.

நச்சிநீர் பிறன் கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் எனும் உரை யுணர்ந்து கேட்ப தன்முனம்