பக்கம் எண் :


86 திருப்புகழ் விரிவுரை

 

ஞானத் தளர் நடையிடாமுன் வருவோனே:-

என்றும் இளையோனாகிய முருகவேள், அம்மையும் அப்பனுங் கண்டு களிக்க, அவர்கள் திருமுன் தளர்நடையிட்டு உலாவுகின்றார்.

அவ்வண்ணம் தளர்நடையிடுவதால், ஏழு உலகங்களும் அசைகின்றன; ஆதிசேடனுடைய ஆயிரம் பணாமகுடங்களும் நெறுநெறு என்று நொறுங்குகின்றன. மகா மேருகிரி இடிந்து விழுகின்றது. இமையவர்கள் தங்கள் பொன்னகரில் குடி புகுகின்றார்கள். அசுரர்கள் வயிற்றில் எரி புகுகின்றது.

“இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி
           றெரிபுகுத உரகர்பதி அபிஷேகமாயிரமும்
   எழுபிலமு நெறு நெறென முடியவட குவடிடிய
           இளையதளர் நடைபழகி விளையாடல் கூருவதும்”
                                             -சீர்பாதவகுப்பு.

தவமலரும்:-

தவ-மிகுதி. திருத்தணி மலையில் நீலோற்பலச் சுனையில் மிகுதியாக நீலோற்பல மலர்கள் மலர்கின்றன. அதனால் அம்மலை நீலகிரி எனப் பேர் பெற்றது.

           “நீலகிரி மருவுகுருபதி”                                          
                         -சீபாதவகுப்பு.

கருத்துரை

திருத்தணியாண்டவனே! உமது திருவடி தந்தருள்செய்.

18

   உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
          முள்ளவே தத்துறைகொ                         டுனர்வோதி
      உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
          உள்ளமோ கத்தருளி                                    யுரவாகி
 வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
      வல்லமீ துற்பலச                                        யிலமேவும்
    வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமறி
        கிள்ளிவீ சுற்றுமலர்                    பணிவேனோ
 பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
      துய்யவே ணிப்பகிர                                    திகுமாரா