பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமது நெய்யனே சுற்றியகு றவர்கோவே செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு கையமால் வைத்திரு மருகோனே தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ தெய்வயா னைக்கினிய பெருமாளே. பதவுரை பை அராவை புனையும்=படத்தையுடைய பாம்பை யணிகலமாக அணிந்த, ஐயர் பாக தலைவி=தலைவராகிய சிவபெருமானுடைய இடப் பாகத்தில் எழுந்தருளியுள்ள பிராட்டியாகிய உம தேவியார், துய்ய வேணி பகிரதி=பரிசுத்தமான சடையில் இருக்கும் கங்கை இந்த இருவர்கட்கும், குமாரா=புதல்வரே! பையமால்பற்றி வளர்=மெல்ல அன்பு பற்றி வளர்ந்த, சைய மேல் வைக்கும்=வள்ளிமலை மேல் வைத்த, முது நெய்யனே=முதிர்ந்த நேயனே! சுற்றிய குறவர் கோவே=சூழ்ந்து நின்ற குறவர்கட்குத் தலைவரே! மால் செய்யும் வெற்பு உருவ=மயக்கத்தைச் செய்யும் கிரவுஞ்சமலை உருவிச் செல்லும்படி, வெய்யவேல் சுற்றிவிடு கைய=வெப்பமான வேலாயுதத்தை சுழற்றிவிட்ட கரத்தரே! மால் வைத்த திரு மருகோனே=அன்பு வைத்த இலக்குமி தேவிக்கு மருகரே! தெய்வ யானைக்கு இளைய=தெய்வத்தன்மையுடைய கணபதிக்குத் தம்பியே! வெள்ளை யானை தலைவ=ஐராவத யானைக்கு அதிபரே! தெய்வ யானைக்கு இனிய=தெய்வயானை யம்மையாருக்கு இனிமையானவரே! பெருமாளே=பெருமை மிகுந்தவரே! உய்யஞானத்து நெறி எப்பொழுதும் கைவிடாது=பிறவித் துன்பத்தினின்றும் உய்யும் பொருட்டு ஞான வழியை அடியேன் எக்காலத்திலும் கைவிடாது பற்றி, உள்ள வேத துறை கொடு=உள்ள வேத நூல்களைக் கொண்டு, உணர் ஓதி=உணர்வுடன் ஓதி, உள்ள மோகத்து இருளை விள்ள=எனக்குள்ள மயக்க இருள் நீங்க, மோக பொருளை உள்ள மோகத்து அருளி=விருப்பம் வைக்க வேண்டிய ஞானப் பொருள்களைக் கருதும்படியான விருப்பத்தைத் தேவரீர் அடியேனுக்கு அருள் செய்து, உறவு ஆகி=தேவரீரிடத்தில் நட்பு வைத்து, வையம் ஏழுக்கும் நிலை செய்யும் நீதி=ஏழுலகங்களையும் நிலை நிறுத்திக் காக்கும் நீதியனே! பழைய வல்லமீது=பழமையான திருவல்லத்திலும், உற்பல சயில மேவும்=நீலோற்பல கிரியிலும் வீற்றிருக்கும், வள்ளியா=கருணையனே! நின் புதிய வெள்ளில்தோய் முத்த முறி கிள்ளி வீசுற்று=உம்மை புதிய வில்வ மரத்திலுள்ள மகிழ்ச்சி தரும் கொழுந்து இலைகளைக் கிள்ளி வீசிப் பூசித்து, மலர் பணிவேனோ=மலரடிகளைப் பணியமாட்டேனோ? பொழிப்புரை படத்தையுடைய நாகாபரணத்தை யணிந்த சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உள்ள உமாதேவியாருக்கும், தூய |