ஏறுபவனும், வல அரி-வலன் என்ற நிருதனை வதைத்தவனுமாகிய இந்திரனுடைய, மட மகள்-மடம் என்னும் குணம் பொருந்திய தெய்வயானை யம்மையாரும், ஆதார பூதம் ஆக-உலகங்கட்கு ஆதார சக்திகளாக வலம் இடம் உறை வாழ்வும்-முறையே வலப்புறமும் இடப்புறமுமாக வாழ்கின்ற வாழ்வையும், ஆராயும் நீதி வேலும்-நீதியை ஆராய்கின்ற ஞானமேயாகிய வேலாயுதத்தையும், மயிலும்-மயில் வாகனத்தையும், மெய்-சத்து, ஞானம்-சித்து, அபிராம தாபம்-அழகின் மிகுதி (அதனால் விளைவது ஆனந்தம்) வடிவமும்- சச்சிதானந்தத் திருவுருவத்தையும், ஆபாதனேனும்-கொடியேனாகிய அடியேனும், நாளும் நினைவது பெறவேணும்-இடையறாது நினைக்கும் தன்மையைப் பெற்று உய்யவேண்டும். பொழிப்புரை அழகு நிறைந்த மாடகூடங்களுடன் கூடிய மதுரையம்பதியிலே, வெள்ளியம்பத்தில், நின்று கால்மாறி யாடிய கண்ணுதற் கடவுள் கூறியருளிய இறையனாரகப் பொருள் என்னும் நூலுக்கு நாற்பத்தொன்பது சங்கப்புலவர்களும் பொருள் கூறி தத்தம் உரையே பெரிதெனக் கலாம் விளைக்க, அதிற் சிறந்தவுரையை ஆராய்ந்து சொல்ல ஊமைப்பிள்ளைப்போல வணிகர் வீட்டில் தோன்றி (உருத்திரஜன்மர் என்ற திருநாமத்துடன் விளங்கி) கலாந்தீர்ந்து முறை செய்த திருவிளையாடலைச் செய்தவரே! ஆராய்ச்சியை யுடையவரே! தீரரே! தீப்புகுந்து இறக்க நினைக்கும் அர்ச்சுனன் உய்வு பெரும் பொருட்டு கூரிய சக்கரப்படையால் கதிரவனை மறைத்தருளிய கோபால மணிவண்ணனுக்கு அன்புமிக்க திருமருகரே! குறையாமல் எப்பொழுதும் ஆரவாரத்துடன் அலைகளை வீசும் காவிரி நதி பாயும் வயலூரிலும், கோனாடு சூழ்கின்ற விராலிமலையிலும் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே! சிறப்பு வாய்ந்து கோலாகலத்துடன் கூடிய நவமணிகளை வரிசையாகப் பதித்த மணிமகுடங்களைத் தாங்கி விளங்குவதும், தேவர்களாலும் தேவதேவர்களாலும் சேவை செய்யப்டுவதும் ஆகிய மலர் போன்ற ஆறு திருமுகங்களையும், பெருமை பொருந்திய வீரமகள் வாழும் பன்னிரு திருப்புயங்களையும், நீண்ட வரிகளுடன் கூடிய வண்டுகள் இருந்து ஸ்ரீராகம் என்னும் பண்பாடும் கடப்பமலர்களால் மணங் கமழ்கின்ற இரு திருவடிகளையும் தணியாத காதலுடைய வள்ளி யம்மையாரும் மேகவாகனனாம் இந்திரனுடைய புதல்வியராகிய தேவகுஞ்சரி யாரும் வலப்புறமும் இடப்புறமுமாக எழுந்தருளியுள்ள வாழ்வையும் நீதியை |