பக்கம் எண் :


100 திருப்புகழ் விரிவுரை

 

திருவடிகளையுடையவரும் ஆகிய சிவபெருமான் ஏந்திய வில்லாகிய அழகிய மலையாகிய மேருவைத் தாக்க வல்லனவும், நறுமணமுள்ள களபச் சாந்து பூசப்பட்ட எழிலில் முழுகுவனவும், தாமரையில் மொட்டு அஞ்சும்படி பெருத்து எழுவனவும், வஞ்சனைக் கருத்தையுடைய மன்மதனுடைய மகுடத்தை அடக்க வல்லனவும், கொடிய கொலைத் தொழிலுக்கு இடங்கொடுப்பனவும், கொடிபோன்ற மேலாடை அணிவனவும், இன்பந்தரும் ஒளி பொருந்திய தங்கக் குடத்துடன் நன்றாகப் போர்புரிய வல்லனவும், வெற்றிச் சின்னமாக புளகாங்கித சுகத்தாலும், மென்மையாலும், வளர்கின்ற, இளைஞர்களின் அறிவுக்குத் துன்பந்தருவனவும், கட்டப்பட்ட இரவிக்கையால் நெருக்குண்பனவும், கயல்மீன் மகரமீன் இவற்றின் கூட்டம் மிகுந்து சிறந்துள்ள நதியில் விளைகின்ற சங்கு, சிப்பி, முத்து இவற்றை அணிவனவும், மேலெழுந்து பாரங்கொண்டு விளங்குவனவும் ஆகிய தனங்களையுடைய மாதர்களின், மகிழம்பூ குவளை மலரின் இதழ் இவற்றின் மணமும் கஸ்தூரியும் கலந்து, கருநிறத்தால் மேகத்தையும் வென்று, வாசனை எண்ணெய் பூசப்பட்ட கூந்தல் அசையவும், இனிமையான அமுதும் போன்றதும் வசப்படுத்துவதுமாகிய மொழி மயில், குயில் என்கின்ற பறவைகளின் குரல்களைக் காட்டவும், வம்பு செய்கின்ற கலவிப் போர் செய்யவும், இயமனுடைய வேல் போல் போர் புரியுங் கண்கள் இரண்டும் மிகவுஞ்சிவக்கவும், மகிழ்ந்து நன்றி பாராட்டுவதான கலவிப்போரில் நகக்குறிகள் வகைவகையாக உடலில் பொருந்த வைத்தும், வளையல்கள் கழன்று விழவும், இடைநெகிழவும், அதரபானஞ் செய்தும் உள்ளம் அதிசயம் அடையவும், ஆசையுடன் அணைக்கும் அவதிநிறைந்த புணர்ச்சி வலையில் என்னுடைய கலைதானம் அழிவு படுதல் நீங்கி, என் பிறவித்துயர் அகலும் வழியைத் தேவரீர் திருவுளம் பற்றி, அடியேன்மீது அன்பு வைத்து, வயலூர் முருகவேளே! போருக்கு உற்ற பன்னிரு கரத்தையுடையவரே! எண்குணங்களையுடையவரே! குன்றக்குடிக்குத் தலைவரே! உமது பதமலரைத் தந்தருளாதோ!

விரிவுரை

ககுப நிலைகுலைய:-

ககுபம்-திசை.

“ககுப மேய எண்களிறு”                   - மாயூரபுராணம்.