பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 101

 

இத்திருப்புகழ் ஒருபாதி மாதரின் அவயவ நலத்தை விதந்து உரைக்கின்றது.

கலைபடுதல் உந்தி:-

“உந்தாத அன்பொடு உருத்திரம் சொல்லி”
                             - திருத்தொண்டர்திருஅந்தாதி.

பிறப்பற நினைந்து:-

“முருகா! அடியேனுடைய பிறவியறுமாறு தேவரீர் திருவுள்ளத்தில் நினைத்தருளவேண்டும்.”

அட்டசிட்டகுண:-

இறைவனுடைய எண்குணங்கள்; தன் வயத்தனாதல், தூயவுடம்பினாதல், இயற்கையுணாவினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை. இத்திருப்புகழின் பிற்பகுதி போர்க்களத்தில் வர்ணனைகளையும் வாசிக்கும் வாத்திய வகைகளையும் விரிவாகக் கூறுகின்றது.

கருத்துரை

குன்றக்குடி மேவுங்குமரா! உமது திருவடியைத் தந்தருள்வீர்.

136

கடினதட கும்ப நேரேன
வளருமிரு கொங்கை மேல்விழு
கலவிதரு கின்ற மாதரொ டுறவாடிக்
கனவளக பந்தி யாகிய
நிழல்தனிலி ருந்து தேனுமிழ்
கனியிதழை மென்று தாடனை    செயலாலே
துடியிடைநு டங்க வாள்விழி
குழைபொரநி ரம்ப மூடிய
துகில் நெகிழ வண்டு கோகில    மயில்காடை
தொனியெழவி ழைந்து கூரிய
கொடுநகமிசைந்து தோள்மிசை
துயிலவச இன்ப மேவுத         லொழிவேனோ
இடிமுரச றைந்து பூசல்செய்
அசுரர்கள்மு றிந்து தூளெழ
எழுகடல் பயந்து கொவென     அதிகோப