எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு இரணமுக சண்ட மாருத மயிலோனே வடிவுடையை அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட வயலிநகர் குன்ற மாநக ருறைவோனே வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வருள் பெருமாளே. பதவுரை இடி முரசு அறைந்து-இடிபோல் முழங்கும் பேரிகைளை ஒலித்து, பூசல் செய்-போர்செய்யும், அசுரர்கள் முறிந்து தூள் எழ-அசுரர்கள் மாண்டு துகளாகுமாறும், எழுகடல் பயந்து கோ என-ஏழு சமுத்திரங்களும் அஞ்சி “கோ” என்று ஓலமிடவும், அதிதோப-மிகுந்த கோபமுள்ள எமபடரும் என் செய்வோம் என-யமதூதர்களும் என் செய்வோம் என்று, நடு நடு நடுங்க- நடுக்கங் கொள்ளவும், வேல் விடு-வேலாயுதத்தை விடுத்தருளிய, இரணமுக- போர்க் களத்தில், சண்ட மாருத-பெருங்காற்றைப் போல் பறக்கும், மயிலோனே-மயில்வாகனரே! வடிவு உடைய அம்பிகாபதி-அழகு நிறைந்த பார்வதி நாதரும், கணபதி சிறந்து வாழ்-பொய்யாக் கணபதியும் சிறப்புடன் வாழ்கின்ற, தட வயலி நகர்-சக்தி தீர்த்தத்துடன் கூடிய வயலூரிலும், குன்ற மாநகர்-குன்றக்குடியிலும், உறைவோனே-வாழ்பவரே! வகை வகை புகழ்ந்து- விதம் விதமாக உம்மைத் துதிசெய்து, வாசவன்-இந்திரனும், அரி-திருமாலும், பிரமர்-பிரமதேவனும், சந்த்ரசூரியர்-சந்திரனும், சூரியனும், வழிபடுதல் கண்டு- வழிபடுவதைக் கண்டு, வாழ்வு அருள்-அவர்கட்கு நல் வாழ்வு தந்தருளிய, பெருமாளே-பெருமையி சிறந்தவரே! கடின தட-வலிமையும் விலாசமும் உள்ள, கும்பம் நேர் என-குடத்துக்கு நிகராக, வளரும்-வளர்கின்ற, கலவி தருகின்ற, கலவி இன்பத்தைத் தருகின்ற, மாதரொடு உறவு ஆடி-பொது மாதர்களின் நட்பு கொண்டு, கன அளக பந்தி ஆகிய-பெரிய கூந்தல் கட்டாகிய, நிழலில் இருந்து-நிழலில் இருந்து, தேன் உமிழ் களிஇதழை மென்று-தேன்துளிக்கின்ற கொவ்வைக்கனி போன்ற அதரத்தை மென்று, தாடனை செயலாலே-தட்டுதல் செய்து, துடி இடை நுடங்க-உடுக்கை போன்ற இடைதுவளவும், வாள் வழி குழை பொர-ஒளி பெற்ற கண்கள் குழைகள் வரை சென்று போரிடவும், நிரம்ப மூடியதுகில் நெகிழ-நிரம்பவும் மறைந்திருக்கின்ற ஆடை தளர்ந்து விழவும், வண்டு கோகிலம் மயில் காடை தொனி எழ-வண்டு குயில் மயில் காடை என்ற பறவைகளின் ஒலி குரலில் உண்டாகவும், விழைந்து |