கூரிய கொடு நகம்இசைந்து-விரும்பி கூர்மையான நகக் குறிகள் வைத்தும், தோள்மிசை துயில்-அம்மகளிரின் தோன் மீது தூங்குகின்ற, அவச இன்பம்மேவுதல்-மயக்க இன்பத்தை விரும்புவதை, ஒழிவேனோ-ஒழிக்க மாட்டேனோ. பொழிப்புரை இடிபோல்பேரிகைகளைக் கொட்டிப் போர்புரியும், அசுரர்கள் மடிந்து பொடியாகவும், ஏழுகடல்களும் அஞ்சி “கோ” என்று கதறவும், மிகுந்த கோபமுள்ள இயம தூதர்களும் என்செய்வோம் என்று நடுக்கங் கொள்ளவும் வேலை விடுத்தருளியவரே! போர்க்களத்தில் பெருங்காற்றைப் போல் பறக்கும் மயிலை வாகனமாக உடையவரே! அழகு நிறைந்த அக்கினீச்சுரரும் பொய்யாக் கணபதியும் சிறப்புடன் எழுந்தருளியுள்ள சக்தி தீர்த்தமுடைய வயலூரிலும், குன்றக்குடியிலும் வாழ்கின்றவரே! இந்திரன் திருமால் பிரமன் சந்திரன் சூரியன் ஆகிய இவர்கள் விதம் விதமாகப் புகழ்ந்து வழிபடுவதைக் கண்டு அவர்கட்கு நல்வாழ்வு தந்தருளும் பெருமிதமுடையவரே! வலிமையும் விசாலமும் பொருந்திய குடத்துக்குச் சமானமாக வளர்கின்ற தனங்களின்மேல் விழுகின்ற கலவியின்பத்தைத் தருகின்ற போது மாதர்களுடன் நட்பு கொண்டும், பெரிய கூந்தல் காட்டின் நிழலில் இருந்து, தேன் துளிக்கின்ற கனிபோன்ற வாயிதழைப் பருகி, தட்டுதல் செய்தும் உடுக்கைபோன்ற இடைதுவளவும், ஒளிபெற்ற கண்கள் காதுவரை நீண்டு போரிடவும், நன்கு மூடிய ஆடை அகலவும் வண்டு குயில் மயில் காடை என்ற பறவைகளின் ஒலியை எழுப்பவும் கூரிய நகக் குறியமைத்தும் அம்மாதரின் தோள் மீது தூங்குகின்ற மயக்க இன்பத்தை விரும்புவதை ஒழிக்கமாட்டேனோ? விரிவுரை இத் திருப்புகழில் முதற் பகுதி மாதர்மீதுள்ள மையல் அயலாக இறைவனை அடிகளார் வேண்டுகின்றார் எமபடரும் என்செய்வோமென:- முருகப்பெருமான் போரில் வேல் ஏவியபோது உண்டாகிய அதிர்ச்சியினால் உலகமெல்லாம் அஞ்சின, அஞ்சுவது என்பதே அறியாத இயம படர்கள் இனி நாம் என்செய்வோம் என்று அஞ்சி நடுநடுங்கினார்கள். சண்டமாருத மயிலோனே:- “மயில்வாகனம் பறக்கும் போது, அதன் வீலியின் காற்றினால் மகமேருகிரி அசைந்தது” என்கின்றார். |