“அருளிற்சீர் பொயாத கணபதி திருவக்கீசன் வாழும் வயலியின் அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே” - (கமலத்தேகு) திருப்புகழ். வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ்தட வயலி:- வயலி-வயலூர். வயலூரில் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு அருள்புரிந்து, திருப்புகழில் வயலூரையும் வைத்துப் பாடு என்று அருளிச் செய்தார். ஒரு தலத்தை வைத்துப்பாடு என்று இறைவன் அளினான் என்பது வேறு எங்கேயும் எந்த வரலாற்றிலும் இல்லாத ஒன்று. மிகப்பெருந்தெய்விகமுடைய தலம் வயலூர். அதனால் அருணகிரிநாதர் சென்ற சென்ற இடந்தோறும், இந்த வயலூரை மறவாது ஆங்காங்கே நினைத்து பாடுவாராயினார். வயலூரில் சிவமூர்த்தி-அக்கினீச்சுரர்; கணபதி-பொய்யாக் கணபதி. “விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து அசைபடு கால்பட் டசைந்தது மேரு” - கந்தரலங்காரம் (11) வகைவகை புகழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ரசூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வருள்:- மூவர்க்குந்தேவர்க்குந் தனிப்பெருந் தலைவர் முருகப்பெருமானே யாகும். அப்பெருமானை வானோரும் ஏனோரும் போற்றி வழிபட்டு வாழ்வு பெறுகின்றார்கள். கருத்துரை குன்றக்குடி வாழும் குமரேசா! மாதர் மயல் அயலாக அருள் செய்வீர். நேசா சாரா டம்பர மட்டைகள் பேசா தேயே சுங்கள மட்டைகள் நீசாளோடே யும்பழ கிக்கவர் பொருளாலே நீயே தானே யென்றொரு சத்தியம் வாய்கூசாதோதுங்க படத்திகள் நேரா லேதானின்று பிலுக்கிகள் எவர்மேலும் ஆசா பாசா தொந்தரை யிட்டவர் மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ காயே மீதோ லெங்கு மினுக்கிகள் வெகுமோகம் |