வாழ் குன்றை தழைத்து அருள் - வளம் வாழ்கின்ற குன்றக்குடி என்னும் அத்தலத்தில் எழுந்தருளியுள்ள, பெருமாளே -பெருமையின் மிக்கவரே! நேச ஆசார ஆடம்பர மட்டைகள்-பிறர் கண்டு நேசிக்கும் பொருட்டு ஆசாரம்போல் நடிக்கும் ஆடம்பரமான பயனற்றவர்களும், பேசாதே ஏசும்- வாய்ப்பேச்சில்லாமலேயே கையாலும் கண்ணாலும் ஜாடை காட்டி வையும், களம் அட்டைகள்-விஷம்போலும் அட்டைபோலும் பிடித்துக் கொள்ளுபவர்களும் நீச ஆளோடேயும் பழகி-நீசகுணமுடையோருடனும் பழகி, கவர் பெருளாலே-அவரிடமிருந்து பறிக்கும் பொருள்பற்றி, நீயே தானே என்று- “நீயே நான்; நானே நீ” என்று ஒரு சத்தியம்-ஒரு சத்தியத்தை வாய் கூசாது ஓதும் கபடத்திகள்-வாய்கூசாமல் சொல்லும் கபமுள்ளவர்களும், நேராலேதான் நின்று பிலுக்கிகள்-நேரில் மட்டும் ஒய்யாரமாக நின்று பகட்டுபவர்களும், எவர்மேலும்-எத்தனைகயோரிடத்தும், ஆசாபாசா தொந்தரை இட்டு- ஆசைபாசம், வைத்தவர்போல் நடித்து தொந்தரை செய்து, அவர் மேல் வீழ்வார்பால் சண்டிகள்-அவர்கள்மேல் மயங்கி வீழ்ந்து தழுவுமவர்களிடம்கொடுமை செய்பவர்களும், கட்டழகாலே தோல் ஏங்கு மினுக்கிகள்-நல்ல அழகுடன் மேல்தோலை மினுக்குபவர்களும், வெகு மோகம்- உன்மீது மிகவும் மோகங்கொண்டுளேன், ஆகாது ஆவேசந்தருது-சகிக்க முடியவில்லை ஆவேசம் வருகிறது. இப்பொழுது ஓகோவாவா என்று பகட்டிகள்-இத்ததியில் ஓகோ விரைவில் வந்து என்னைச்சேர் என்று பகட்டு செய்பவரும், ஆகாமோகா வம்பிகள் கிட்டிலும்-தகுதியற்ற மோகத்தை யுடைய வம்பு செய்பவர்களுமாகிய விலைமகளிருடைய, உறவு ஆமோ-சம்பந்தம் தக்கதாமோ? (ஆகாது). பொழிப்புரை மௌனமாகப் போய் கோபிகைகள் வீட்டிலே நின்று உறியில் உள்ள தயிரை ஆஆ என்று வாய் நிறைவுண்டு அருளினவரும், புயவலியாற் புகழ்பெற்ற கம்சன்(கண்ணனை) கொல்லுமாறு விடுக்க வந்தவளும், இடம்பமாகப் பேசும் பெரிய அகன்ற வாயையுடையவளும், பெண்போன்று தடையின்றி வந்தவளுமான பூதகி என்ற பேயைக் கொன்றவருமாகிய நாராயண மூர்த்தியினுடைய திருமருகரே! குற்றத்தோடு பழகுபவனும் பகைவரைப் பகைப்பவனுமாகிய சூரபன்மனுடன் பொருதுவலிய போரை யொழித்த பெரிய சூரரே! உலகமெங்கணு நின்று அருள் புரிந்து விளங்குகின்ற முருகக்கடவுளே! வானுலகிலும் ஏழுதீவுகளிலும் புகழ்பெற்றதும் தேனாறு பாயுந் திருவுடையதும் தூய மலைத் தலமுமாகிய மயூரகிரியினரே! வாழ்வுக்கிடமான அக்குன்றக்குடி தழைக்குமாறு எழுந்தருளியுள்ள பெருமித முடையவரே! பிறர் நேசிக்குமாறு ஆசாரம்போல் நடிக்கும் ஆடம்பரத்தையுடைய |