பயனற்றவர்களும், வாய்திறவாமல் கையாலுங் கண்ணாலும் ஜாடைகாட்டி வையும் விஷத்தை யொத்து அட்டைபோல் ஒட்டிக் கொள்பவர்களும், நீசமனிதருடன் பழகிப் பொருளைக்கவரும் பொருட்டு, “நீயே தான்; நானே நீ” என்று வாய்கூசாமல் சத்தியஞ்செய்யும் கபட குண முடையவர்களும், நேரில் பட்டும் நின்று பகட்டுபவர்களும், எத்தகையோரிடத்தும் ஆசாபாசம் வைத்துத் தொந்தரை செய்த, தங்களின்மேல் மயங்கி வீழ்ந்து தழுவுவோர்பால் கொடுமை செய்பவர்களும், (காதல் கொண்டவரைக் கண்டு) “ஆகா! உம்மேல் மிகுந்த மோகங் கொண்டிருக்கின்றேன். என்னால் பொறுக்க முடியவில்லை; இப்பொழுது ஓகோவிரைவில் வந்து சேரும்” என்று பகட்டு செய்பவர்களுமாகிய தகுதியற்ற மோகத்தைச் செய்யும் விலைமாதர்களுடைய உறவு தகுதியாகுமோ?(ஆகாது). விரிவுரை நேசாசாரா...................உறவாமோ:- விலைமகளிரது மாயச் செய்லகளை உரைக்குந்திறத்தை இதில் நன்கு காண்க. இதனைக் கண்டு உலகம் திருந்தி உய்க. பேயானாள்:- கண்ணபிரான் ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டில் யசோதையிடம் வளர்ந்துவர, மாயையால் அவர் தன்னைக் கொல்ல இருக்குந் தன்மையை உணர்ந்த கம்சன், பூதகி என்ற கொடிய ஓர் அரக்கியைக் கண்ணனைக் கொல்லுமாறு விடுத்தான். அவள் அரமடந்தை உருவெடுத்து உலகிலுள்ள குழந்தைகளை யெல்லாம் நச்சுப் பாலூட்டிக் கொன்று கொண்டு, இறுதியில் ஆயர்பாடிக்கு வந்தாள். வந்தவள் நந்தகோபர் வீட்டில் நுழைந்து ஒரு புறம் விளையாடிக் கொண்டிருந்த கமலக்கண்ணனை யெடுத்து, “கண்ணப்பா! என் முலையை உண்ணப்பா!” என்று முலை யூட்டினள். அவள் வஞ்சனையை யுணர்ந்த கண்ணன், அறிந்து நகை யாடிமுலையங்கைகொடு பற்றி மறங்குலவு வஞ்சமகள் மாமுலை மணிக்கண் திறந்தொழுகு பாலினொடு செய்ய தளிரென்னப் பிறங்குகனி வாய்முகில் பிழிந்துயிர் குடித்தான். பூபதி உயிர்துறந்து ஒரு பெரிய கரியமலைபோல் விழுந்தாள். பெருமான் முலையுண்ட புண்ணியத்தால் முத்திபெற்று உய்ந்தனன். பார் எங்கும் அருட் பொலி முருகோனே:- உலகமுழுவதும் திருவருள்புரிந்து விளங்குகின்ற தெய்வமணி |