பக்கம் எண் :


108 திருப்புகழ் விரிவுரை

 

திருவேலிறைவனேயாம். கலியுகவரதனாங் கந்தக் கடவுளைக் கருதினவர்க்கு கருதிய யாவுங் கைகூடும்.

குன்றை:-

இது குன்றக்குடி எனவும் மயூரகிரி எனவும் பெயர் பெறும். காரைக்குடிக்கு அருகில் உள்ளது. இங்கு சுவாமி ஆறு திருமுகங்களோடு விளங்குகின்ற காட்சி இரும்பு நெஞ்சையும் உருக்கும்.

கருத்துரை

திருமால்மருகரே! அருணலமிக்க முருகவேளே! குன்றக்குடி யமர்ந்த குமரகுருபர! விலைமகளிர் வலைப்படா வண்ணம் ஆண்டருள்வீர்.

138

பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
பருவம தன்கைச் சென்றக்     குணமேவிச்
சிறுமைபொருந்திப் பெருமைமு டங்கிச்
செயலும ழிந்தற்    பமதான
தெரிவையர்தங்கட் கயலைவி ரும்பிக்
சிலசில பங்கப்     படலாமோ
கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
கிலுமெதிர் சண்டைக்    கெழுசூரன்
கிளையுடன்மங்கத் தலைமுடி சிந்திக்
கிழிபட துன்றிப்     பொருதோனே
குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
பனமனு வுஞ்சொற்     குருநாதா
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
குடிவளர் கந்தப்    பெருமாளே.

பதவுரை

கெறுவித-கர்வமும், வஞ்சம்-வஞ்சனையும், கபட மொடு-சூதும் கொண்டு, எண்திக்கிலும்-எட்டுத் திசைகளிலும், எதிர் சண்டைக்கு எழு-எதிர்த்து சண்டைக்கு என்று எழுந்த, சூரன்-சூரபன்மன், கிளை உடன் மங்க- சுற்றத்தாருடன் மங்கி அழியுமாறு, தலை முடி சிந்த-அவர்களின் தலைமுடிகள் சிதறவும், கிழிபட-அவர்களின் உடல் கிழிப்பட்டு