அழியும்படியும், துன்றிப் பொருதோனே-நெருங்கிப் போர்புரிந்தவனே! குறுமணி-அகத்தியமுனிவர், இன்ப பொருள் பெற-இன்பத்தைத்தரும் உண்மைப் பொருளையறியும்படி, அன்று உற்பன மனுவும் சொல்-அந்நாள் திருவுளத்தில் உதித்த மந்திரத்தை உபதேசித்த, குருநாதா-குருநாதரே! குலகிரி- சிறந்தகிரியாகவும், துங்ககிரி - பரிசுத்தமான கிரியாகவும், உயர்-சிறந்துள்ள, குன்றக்குடி வளர் கந்த குன்றக்குடியில் வீற்றிருந்தருளும் கந்தக்கடவுளே! பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! பிறர் புகழ்-மற்றவர்கள் புகழும், இன்சொல் பயிலும்-இனிய சொற்களைப் பயிலுகின்ற, இளந்தைப் பருவம்- இளம்பருவமுள்ள, மதன் கை சிலையாலே-மன்மதனுடைய கையில் உள்ள வில்லாலே, பிறவிதரும்-பிறவியினால் உண்டாகும், சிக்கு அது பெருகும்- சிக்கல்கள் பெருகுகின்ற, பொய் பெருவழி சென்று-பொற்றான பெரிய வழியில் சென்று, அகுண மேவி-அப்பொய்க்குணத்தையே பொருந்தி, சிறுமை பொருந்தி-அதனால் சிறுமையடைந்து, பெருமை முடங்கி-பெருமை சுருங்கி, செயலும் அழிந்து-செயல்கள் அழிந்து, அற்பம் அது ஆன-அற்பகுணமுள்ள, தெரிவையர்தம்-மாதர்களின், கண்கயலை விரும்பி-கயல்மீன்போன்ற கண்களை விரும்பி, சில சில பங்கம் படலாமோ-அதனால் சிலசில அவமானங்களை அடியேன் அடையலாமோ? பொழிப்புரை கர்வமும், வஞ்சனையும் சூதும் கொண்டு எட்டுத் திசைகளிலும் எதிர்த்துப் போருக்கு எழுந்த சூரபன்மன், சுற்றத்தாருடன் மங்கியழியவும், அவர்கள் தலைமுடிகள் சிற்தவும், உடல் கிழியவும், நெருங்கிப் போர் புரிந்தவரே! அகத்திய முனிவர் இன்பந் தரும் உண்மைப் பொருளை அறியும்படி அன்று திருவுளத்தில் தோன்றிய மந்திரத்தை உபதேசித்த குருநாதரே! சிறந்ததும், தூயதும் ஆகிய குன்றக்குடி என்ற திருமலைமீது எழுந்தருளியுள்ள, கந்தப் பெருமானே! பெருமித முடையவரே! பிறருடைய புகழும் இனிய சொற்களைப் பயிலுகின்ற இளம் பருவமுள்ள மன்மதனுடைய கையிலுள்ள வில்லால், பிறவியினால் உண்டாகின்ற சிக்கல்கள் பெருகும் பொய் வழியிற் சென்று, அப்பொய்மையே பொருந்தி, சிறுமை பெருகி, கயல்மீன்போன்ற கண்களை விரும்பிய சிலசில அவமானங்களை அடியேன் அடையலாமோ? விரிவுரை பிறர்புகழ்:- மன்மதனை சிவஞானியர் அன்றி மற்றவர்கள் புகழ்வார்கள். அதனால் பிறர் புகழ் என்று இங்கு அடிகளார் அழகாகக் குறிப்பிடுகின்றார். |