இளந்தைப்பருவ மதன்:- மன்மதன் இளமையான பருவமுள்ளவன். சிறுபிள்ளையாதலால் சதா குறும்பு செய்வான். பிறவிதரும் சிக்கது பெருகும்:- பிறப்பின் தன்மையால் பல சிக்கல்கள் ஏற்படும். அது பிறவியின் குணமாகும். மரம், செடி, கொடிகளில் காய்க்கும் காய்கள் ஒன்று போல் காய்க்கின்றன. ஒரு காய் உறைக்கும்; ஒன்று புளிக்கும்; ஒன்று இனிக்கும் என்றில்லாமல் எல்லாம் ஒன்று போல்தான் இருக்கின்றன. ஆனால் ஒரு தாய் ஒரு தந்தையிடம் பிறக்கும் பிள்ளைகள் ஒன்றுபோல் மற்றொன்று இருப்பதில்லை. உதாரணமாக, தந்தை விச்சிரவசு; தாய் கேகசி. இந்த இருவருக்கும் பிறந்த இராவணன் குணம் வேறு; கும்பகர்ணன் குணம் வேறு; விபீஷணன் குனம் வேறு; சூர்ப்பணகையின் குணம் வேறு. இதற்கு என்ன காரணம்? இராவணன் கரு உதித்த நேரம் சந்தியா காலம் - மாலை; கும்பகர்ணன் கரு உதித்த நேரம் நடு இரவு; விபீஷணன் கரு உதித்த நேரம் பிரம்ம முகூர்த்தம்; சூர்ப்பணகை கருஉதித்த நேரம் காலை. சந்தியா காலம். அந்ததந்த கருப்பதிந்த நேரத்துக்குத் தக்கவாறு குணங்கள் மாறுபட்டன. அதனால் பிறப்பினால் பலப்பல விதமான குணங்கள் ஏற்படுகின்றன. பொய்ப் பெருவழி சென்றக் குணமேவி:- மெய்வழி விடுத்துப் பொய் வழியடுத்து பொய்மையான குணங்களை யடைந்து ஆன்மாக்கள் கெடுகின்றன. சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி:- சிறுமை-நற்குணங்கள்இன்றி சிறுமையை யடைந்து, அதனால் பெருமை குன்றி மனிதர் மாய்கின்றனர். குறுமுனி யின்பப் பொருள்பெற அன்றுற் பனமநுவுஞ் சொற் குருநாதா:- அகத்தியர்குறிய வடிவமுள்ள பெரியவர். வடிவத்தால் சிறியவர்; மாதவத்தால் பெரியவர். அவருடைய கை கவிழ்ந்தது; விந்தமலை பாத வுலகம் புகுந்தது. கை இப்படி மேல் பக்கம் புரணட்து. ஏழுகடல்களும் வற்றிவிட்டன. உற்பனம்-தோற்றம். முருகவேள் தமது உள்ள சிறந்த திருத்தலம். இத் திருமலையின் பெருமையை அடிகளார் குலகிரி “என்றம், துங்கக்கிரி” என்றும் இங்கு வியந்துரைக்கின்றார். |