பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 111

 

கருத்துரை

குன்றக்குடி வளரும் குகனே! மாதர் வயப்பட்டு மங்காத வண்ணம் அருள்செய்வீர்.

139

தவள மதிய மெறிக்குந் தணலாலே
சரத மதனன் விடுக்குங் கணையாலே
கவன மிகவு முரைக்குங் குயிலலே
கருதி மிகவு மயக்கம் படவோதான்
பவள நிகரு மிதழ்ப்பைங் குறமானின்
பரிய வரையை நிகர்க்குந் தனமேவுந்
திவளு மணிகள் கிடக்குந் திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே.

பதவுரை

பவளம் நிகரும் இதழ்-பவளம் போன்ற அதரத்தையுடைய, பை குறமானின்- பச்சைவண்ணமுடைய வள்ளிபிராட்டியின், பரிய வரையை நிகர்க்கும்-பருத்த மலைக்கு ஒப்பான, தனம் மேவும்-தனத்தின் மீதுள்ள, திவளும் மணிகள் கிடக்கும்-ஒளி வீசும் மணிமாலைகள் பொருந்தும், திருமார்பா-அழகிய மார்பினரே! திகழும் மயிலின் மலை கண்-விளங்குகின்ற மாயூர கிரியில் வாழ்கின்ற, பெருமாளே-பெருமையின் மிகுந்தவரே! தவளம் மதியம் எறிக்கும் தணலாலே-வெண்ணிறமுள்ள சந்திரம் வீசும் நெருப்பினாலும், சரச மதனன் விடுக்கும் கணையாலே-சரசமாக விளையாடும் மன்மதன் செலுத்தும் கணையினாலும், கவனம் மிகவும் உரைக்கும் குயிலாலே-கலக்க மிகும்படி கூவுகின்ற குயிலினாலும், கருதி மிகவும் மயக்கம் நான் படவோ-அடியேன் உம்மை நினைந்து மிகவும் மயக்கத்தை யடையலாமோ?

பொழிப்புரை

பவளம் போன்ற சிவந்த இதழையுடைய, மரகத வண்ணம் படைத்த வள்ளி நாயகியாரின் பருத்த மலைபோன்ற தனங்களில் விளங்குகின்ற ஒளிவீசும் மணிமாலைகள் பொருந்தும் திருமார்பினரே! விளங்குகின்ற மாயூரகிரியில் வாழும் பெருமிதமுடையவரே! வெண்ணிறமுள்ள சந்திரன் விடும் வீசும் நெருப்பினாலும், சரச விளையாடல் புரியும் மன்மதன் விடும் கணையினாலும், கலக்கமடையும்படி கூவுகின்ற குயிலாலும், உம்மை நினைத்து தலைவியாகிய நான் மயக்கப்படுவது முறையோ?