பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 113

 

ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
லேவாரும் விழிமாதர்    துயரூடே
ஏகாமலழியாக மேலான பதமீதி
லேகீயு னுடன் மேவ   அருள்தாராய்
தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
தானேறி விளையாடு    மொருபோதில்
தாயாக வறுசோரை காணாது களவாடு
தாமோத ரன்முராரி    மருகோனே
மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
மாலாகி விளையாடு   புயவீரா
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
மாயூர கிரிமேவு    பெருமாளே.

பதவுரை

தாம்மோகம் உடன்-தாம் ஆசையோடு, ஊறுபால் தேடி-கறந்த பாலைத் தேடி, உரலூடுதான் ஏறி விளையாடும் ஒரு போதில்-உரலுடன் ஏறி விளையாடிய ஒரு பொழுதில், தாய் ஆகவரு சோலை-தாயாக வந்த யசோரை, காணாது- காணாவண்ணம், களவு ஆடு-பாலைத் திருடிய, தாமோதரன்-தாமோதரன், முராரி-முராரி எனப்படும் திருமாலின் மருகோனே-திருமருகரே! மாமாது- இலக்குமியின் மகளாகிய, வனமாது-வனத்தில் வளர்ந்த வள்ளியம்மை, கார்மேவு சிலைமாது-மேகந்தவழும் வள்ளி மலையில் வாழ்ந்த மாது, மால் ஆகி-அன்பு பூண்டு, விளையாடு புயவீரா-விளையாடுகின்ற புயங்களையுடைய வீரரே! வான் நாடு புகழ் நாடு-விண்ணுலகத்தோரும் புகழ்கின்ற நாட்டில், தேன் ஆறு புடை சூழும்-தேனாறு அருகில் சூழ்ந்து ஓடுகின்ற, மாயூரகிரி மேவும்- மாயூர கிரியில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையிற் மிகுந்தவரே! நாமேவு குயிலாலும்-அச்சத்தைத் தரும் குயிலாலும், மாமாரன் அயிலாலும்- சிறந்த மன்மதனுடைய கணையினாலும், நாள்தோறும் மதிகாயும் வெயிலாலும்- தினந்தோறும் காய்கின்ற வெயிலினாலும், நார் மாதர் வசையாலும், வேய் ஊதும் இசையாலும்-புல்லாங்குழல் இசையாலும், நாடு ஆசை தரும் மோக வலையூடே-விரும்புகின்ற ஆசையால் வரும் மோக வலைக்குள்ளே அடியேன் சிக்கி, ஏமாறி-ஏமாற்றம் அடைந்து, முழுநாளும் மால் ஆகி-நாள் முழுவதும் மயக்கங்கொண்டு, விருதாவிலே-வீணாக, வாரும் விழிமாதர் துயரூடே-நீண்ட கண்களையுடைய மாதர்களால் வரும் துன்பத்துக்குள்ளே, ஏகாமல்-செல்லாமல், அழியாத மேல் ஆன பதம் மீதில் ஏகீ-அழிவில்லாததும் மேலானதும் ஆகிய பதத்தை அடைந்து, உன் உடன் மேவ அருள் தாராய்-தேவரீருடன் மருவியிருக்கத் திருவருளைத் தருவீராக.